பட்டதாரிகளுக்கு வேலை: 1 லட்சம் வேலை வாய்ப்பை அறிவித்த பிரபல ஐடி நிறுவனங்கள்!

|

ஐடி துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் முக்கிய நிறுவனங்கள் சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி எப்போது செயல்பாட்டுக்கு வரும்

தடுப்பூசி எப்போது செயல்பாட்டுக்கு வரும்

கொரோனா தாக்கம் நாடுமுழவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் தாக்கத்தை குறைக்கும் தடுப்பூசி எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. குறிப்பாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளாவிய அளவில் வேலையிழப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பு

இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பு

இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சில நிறுவனங்களில் சம்பளத்தில் பிடிப்புகளும் செய்யப்படுகிறது. இன்னும் பல நிறுவனங்களில் சில ஊழியர்கள் 40 நாட்கள் வரை பெஞ் செய்யப்படுகிறார்கள். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் சில டிஜிட்டல் துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களைச் சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது.

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் அறிவித்தது. மார்ச் மாதம், கொரோனா தொற்று காரணமாக, வீட்டிலிருந்து பணி புரிவதை எளிதாக்க, யோசப்-களுக்கான சில விதிமுறைகளை DoT தளர்த்தியது. வீட்டிலிருந்து பணி புரிவதற்கான கால அளவு ஜூலை 31ம் தேதி வரை என்று முன்பு நீட்டிக்கப்பட்டது. தற்பொழுது இந்த காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று DoT அறிவித்துள்ளது.

புதிதாக வெளியிட்ட அறிக்கை

புதிதாக வெளியிட்ட அறிக்கை

அரசு புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி. IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31ம் தேதி வரை அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத்துறை

தகவல் தொழில்நுட்பத்துறை

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்து வரும் அவுட்சோர்சிங் காரணமாக க்ளைன்ட் ப்ராஜெக்ட்களை முடிக்க முன்னதாக இருந்து குழுக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேறிய பட்டதாரிகள்

வெளியேறிய பட்டதாரிகள்

கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்படாமல் இருந்த வேலைவாய்ப்பு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பில் வெளியேறிய பட்டதாரிகளுக்கும் ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளன.

அதிகாரிகளையும், ப்ரஷர்களையும் பணியமர்த்த முடிவு

அதிகாரிகளையும், ப்ரஷர்களையும் பணியமர்த்த முடிவு

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் ஜாம்பவான்களாக திகழும் முன்னணி என 4 நிறுவனங்களை சொல்லலாம். மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கான்சல்டன்ஸி சர்விசஸ் (டிசிஎஸ்), 40,000 புதிய அதிகாரிகளையும், ப்ரஷர்களையும் பணியமர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

15000 ப்ரஷர்களை பணியமர்த்த முடிவு

15000 ப்ரஷர்களை பணியமர்த்த முடிவு

சிடிஎஸ் நிறுவனம் புதிதாக 15000 ப்ரஷர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஹெச்சிஎல் நிறுவனமும் புதிதாக 15000 வேலை வாய்ப்பை வழங்க முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

20,000 பேருக்கு வேலை வாய்ப்பு

20,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அதேபோல் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிறுவனமும் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பை அறிவித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களாக வேலை இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து வரும் வேலை வாய்ப்புகளும் ப்ராஜெக்ட்களும் வேலை பழுவை அதிகரித்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு பிறகு உலகின் 2 வது பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ்! அடுத்த குறி ஆப்பிள் தான்!ஆப்பிள் நிறுவனத்திற்கு பிறகு உலகின் 2 வது பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ்! அடுத்த குறி ஆப்பிள் தான்!

Best Mobiles in India

English summary
Top IT companies hiring Jobs over 1 lakh employees

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X