ஜிமெயில் டெலிட் பாலிசி.. யூஸ் பண்ணாத அக்கவுண்ட் காலி.. யூடியூப், டிரைவ் எல்லாம் போயிரும்.. என்ன வழி?
கூகுள் (Google) நிறுவனம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட்களை நிரந்தரமாக டெலிட் (Delete) செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது. யாரேனும் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடர்ந்து பயன்படுத்தாமல், இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களிடம் கூட கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கிறது. ஏனென்றால், அந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இலவசமாக கொடுக்கப்படுவதால் நாளுக்கு நாள் அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால், யூடியூப் (YouTube), மேப்ஸ் (Maps), பிளே ஸ்டோர் (Play Store), குரோம் (Chrome) உள்ளிட்ட ஆப்ஸ்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அவ்வளவு ஏன்? இந்தியாவில் ஆதார் கார்டு சேவை முதல் பேங்க் சேவை வரையில் எளிதாக பெறுவதற்கு ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருக்கின்றனர். இதில் பலரும் ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடங்கிய பின்பு, அதைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்கள். ஏன்? நம்மில் பலரும் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்ட் கூட மறக்கும் அளவுக்கு அதை பல மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்திருப்போம்.
இவர்களிடையே கூகுளின் புதிய பாலிசி சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், இந்த பாலிசி மூலம் 24 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்கள் நிரந்தரமாக டெலிட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், ஜிமெயில் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூடியூப் (YouTube), கூகுள் போட்டோஸ் (Google Photos), டிரைவ் (Drive), காலண்டர் (Calendar) ஆகிய ஆப்களின் சேவையும் நிரந்தரமாக நீக்கப்படும்.
இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படுகிறது. அதற்குள் மீண்டும் பயன்படுத்துவதை தொடங்க வேண்டும். ஒருவேளை நீங்கள் 24 மாதங்களும் மேலாக கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்தவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது, தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதை குறைந்தது 24 மாதங்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இதில் இமெயில் அனுப்புதல் மற்றும் பெறுதல் அடங்கும். இதை செய்ய தவறினால், அக்கவுண்ட் டெலிட் செய்யப்படும். அதேபோல அந்த அக்கவுண்ட் மூலம் இணைக்கப்பட்டிருக்கும், கூகுள் டிரைவ், யூடியூப், பிளே ஸ்டோர் போன்ற ஆப்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
இதுவரை ஜிமெயிலை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட டிசம்பருக்குள் பயன்படுத்தத் தொடங்கிவிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த பழைய அக்கவுண்ட் தேவையில்லை என்றால், அந்த அக்கவுண்ட்டில் இருக்கும் இமெயில், போட்டோஸ், டாக்குமெண்ட்ஸ் போன்ற டேட்டாவை மீட்டுக் கொள்ளுங்கள். இந்த பாலிசி மூலம் டெலிட் செய்யப்படும் அக்கவுண்ட்களை அதே பெயரில் மீண்டும் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, டிசம்பர் மாதத்துக்குள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட் குறித்த முடிவை எடுத்து விடுங்கள். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








