Home
News

ஒரேவொரு பிளான்.. 19 ஓடிடி ஆப்ஸ் சப்கிரிப்ஷன்.. 3.3 டிபி டேட்டா.. 300 எம்பிபிஎஸ் வேகம்.. அம்பானினா சும்மாவா?

ஒரேவொரு ஜியோ பைபர் பிளானில் (JioFiber Plan) ஒரு மாதத்துக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா, 19 ஓடிடி ஆப்ஸ் சப்கிரிப்ஷன் கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்த பிளானை பற்றி நிறையபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்தால் ரீசார்ஜ் செய்யாமல்விட மாட்டார்கள்.

இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமான ஜியோ (Jio) நியாமான விலையில் அட்டகாசமான சலுகைகளை கொண்ட ஜியோ பைபர் திட்டங்களை வழங்கி வருகிறது. மொபைல் டேட்டாவை போலல்லமால், கூடுதலாக பல்வேறு சலுகைகள் அதில் கிடைக்கின்றன. அதாவது, நாள்தோறும் தடையில்லாத அன்லிமிடெட் டேட்டா, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளங்களின் சப்கிரிப்ஷனை வழங்குகிறது.

ஒரேவொரு பிளான்.. 19 ஓடிடி ஆப்ஸ் சப்கிரிப்ஷன்.. என்ன விலை?

குறிப்பாக, ஜியோ பைபர் பிளான்கள் ஒரு மாத வேலிடிட்டி கொண்டிருப்பதால், ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும் எச்டி தரத்தில் நாள்தோறும் வீட்டின் டிவியில் புதுப்புது படங்களை பார்த்துக்கொள்ளலாம். இதில் சில பிளான்களில் 300 எம்பிபிஎஸ் வேகம் கொடுக்கப்படுவதால், ஒரு குடும்பம் முழுவதும் டேட்டாவை பயன்படுத்தினாலும் வேகம் குறையாது.

இப்படிப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரூ. 1499 மதிப்புள்ள ஜியோஃபைபர் திட்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், ஒரு மாதத்துக்கு ரூ.1500 மதிப்புள்ள ஓடிடி திட்டங்களை கூடவே அன்லிமிடெட் டேட்டா உடன் வழங்கினால் யாரும் அந்த திட்டத்தை விட்டுவைக்க மாட்டார்கள். இந்த ஜியோஃபைபர் திட்டத்தின் சலுகைகளை இப்போது, பார்ப்போம்.

ஜியோஃபைபர் ரூ 1499 திட்ட விவரங்கள் (JioFiber Rs 1499 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். நாள்தோறும் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும். சொல்லப்போனால், ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டா ஒதுக்கப்படும். நீங்கள் நாள்தோறும் எச்டி தரத்தில் எத்தனை படங்களை பார்த்தாலும் டேட்டாவை குறைக்க முடியாது.

அதேபோல 300 எம்பிபிஎஸ் வேகம் கொடுக்கப்படுவதால், தடையில்லா அனுபத்தை பெற முடியும். இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ55, வூட் செலக்ட், வூட் கிட்ஸ், சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரி பிளஸ், யுனிவர்சல் பிளஸ், ஈராஸ்நவ், லயன்ஸ்கேட் பிளே உள்ளிட்ட ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.

அதேபோல ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாவன் சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும். இப்படி பல்வேறு நம்முடியாத சலுகைகள் கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioFiber Rs 1499 Plan Comes With 300 Mbps, Unlimited Data, OTT Benefits 1 Year Validity Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X