யூஸ் பண்ணாத ஜிமெயில் டெலிட்.. டிசம்பரில் கெடு வைத்த கூகுள்.. இதை செய்யலனா ரிக்கவரி கூட கிடையாது!
கூகுள் நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்களை அடுத்த மாதத்திலிருந்து டெலிட் செய்யப்போகிறது. இந்த டெலிட் பாலிசியால் என்னென்ன ஆப்களை பயன்படுத்த முடியாமல் போகும்? ஜிமெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவாக வைத்திருப்பது எப்படி? உள்ளிட்ட முழு விவரம் இதோ.
இப்போதெல்லாம், கூகுள் அக்கவுண்ட் (Google Account) வைத்திருக்காதவர்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மக்களிடையே அது பின்னி பிணைந்துவிட்டது. ஏனென்றால், நம்மிடையே பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களில் தொடங்கி அதில் இருக்கும் முக்கிய ஆப்கள் வரையில் பயன்படுத்த வேண்டுமானால், உங்களிடம் கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.

இந்த கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் ஜிமெயிலானது (Gmail), யூடியூப் (YouTube), கூகுள் டிரைவ் (Google Drive), கூகுள் மேப்ஸ் (Google Maps), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆப்களுடன் சிங்க் செய்யப்பட்டிருப்பதால், அதை தவிர்த்துவிட்டு அவ்வளவு எளிதாக இருந்துவிட முடியாது.
இப்படி, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடி மக்களிடம் கூகுள் அக்கவுண்ட் இருக்கிறது. இவ்வளவு அக்கவுண்ட்களை பராமரிப்பது, கூகுள் நிறுவனத்துக்கு சற்ற சவாலான காரியமாகவே இருக்கும் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கோடிக்கணக்கானோர்களில் பல லட்சம் பேர் கூகுள் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்தோடு அதை மறந்துவிடுவார்கள்.
அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை ஓப்பன் செய்துவிட்டு, அதை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இப்படியான எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூகுள் நிறுவனமானது, ஜிமெயில் டெலிட் பாலிசியை (Gmail Delete Policy) இந்தாண்டு தொடக்கத்திலேயே கொண்டுவந்தது. அப்போதே வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் அக்கவுண்ட்களை டெலிட் செய்யும் பணி தொடங்கும் என்று தெரிவித்திருத்தது.

ஆகவே, அடுத்த மாத்தத்தில் இருந்து, இந்த பணி தொடங்கப்படுகிறது. இதனால், பல லட்சம் அக்கவுண்ட்கள் டெலிட் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால், அதுதொடர்பான டேட்டாக்களையும் திரும்ப பெற முடியாமல் போகலாம். ஒருவேளை நீங்கள் உங்களது கூகுள் அக்கவுண்ட்டை 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது, தெரிந்து கொள்ளுங்கள்.
கூகுள் அக்கவுண்ட்டை ஆக்டிவாக வைத்திருப்பது எப்படி?
உங்களது ஜிமெயிலை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதில் இமெயில் அனுப்பதல், பெறுதல் கட்டாயமாகும். அதேபோல கூகுள் டிரைவில் ஆடியோ, வீடியோ, போட்டோ, டாக்குமெண்ட்ஸ் போன்ற டேட்டாக்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். அவ்வப்போது, அதை டவுன்லோட் செய்ய மறக்காதீர்கள். கூகுள் அக்கவுண்ட்டுடன் சிங்க் (Sync) செய்யப்பட்டிருக்கும் பிளே ஸ்டோர், குரோம், டாக்ஸ் அல்லது த்ர்ட் பார்ட்டி ஆப்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
இதையெல்லாம், ஒரேவொரு கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக செய்துவிடுவார்கள். ஆனால், பல அக்கவுண்ட்கள் வைத்திருந்து, பயன்படுத்த நேரமில்லாமல் இருப்பவர்கள், மேற்கூறிய சிலவற்றை கட்டாயம் செய்து விடுங்கள். தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, செய்துவிடுங்கள். ஒருவேளை இன்-ஆக்டிவாக இருக்கும் அக்கவுண்ட் உங்களுக்கு தேவையில்லை என்றாலும், அதில் இருக்கும் டேட்டாக்களை சேமித்து கொள்ளுங்கள்.

ஏனென்றால், பலர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட் பற்றி தெரியதவர்களுக்கு அதை ஓப்பன் செய்து கொடுத்திருப்பீர்கள். அவர்களுக்கும் இந்த டெலிட் பாலிசி பொருந்தும் என்பதால், அவர்களின் அக்கவுண்ட்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள். அதேபோல தேவையில்லாத கூகுள் அக்கவுண்ட்டை அப்படியே விடும் முன்பு, அதை பேங்க், ஆதார், பான் போன்ற முக்கியமான ஆவணங்களுக்காக பயன்படுத்தி இருந்தீர்களா? இல்லையா? என்பதை உறுதி செய்ய மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








