1 ரீசார்ஜில் 4 சிம்களுக்கு சலுகை.. BSNL ஃபேமிலி போஸ்ட்பெய்ட் பிளான்.. பெஸ்ட் சாய்ஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு (Postpaid Plans) குடும்ப உறுப்பினர்களின் சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் ரூ. 525 முதல் தொடங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரூ. 525 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்ட சலுகைகள்: இதுவொரு மாதாந்திர திட்டமாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice
Calls), ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 85 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், 255 ஜிபி ரோலோவர் டேட்டா கிடைக்கும். அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி வீதம் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படி மாதம் முழுவதும் 85 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஒருவேளை 50 ஜிபி பயன்படுத்திவிட்டு, 35 ஜிபி மீதம் வைத்திருந்தால், அந்த டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவே ரோலோவர் டேட்டா சலுகையாகும். இதுமட்டுமல்லாமல், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தோடு, ரூ. 100 செலுத்தினால், உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவரது பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கும் சலுகைகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் மேலும் ஒரு சிம் கார்டை இணைத்துக்கொண்டால், அந்த சிம் கார்டு வாடிக்கையாளர், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 20 எஸ்எம்எஸ், 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ரூ.100 ஆக்டிவேஷன் கட்டணம் மட்டுமே மாதம் மாதம் கட்ட வேண்டியது கிடையாது.
ரூ. 798 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்ட சலுகைகள்: இதுவொரு மாதாந்திர திட்டமாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice
Calls), ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படும். 150 ஜிபி ரோலோவர் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தோடு, ரூ. 100 செலுத்தினால், உங்களது குடும்பத்தில் உள்ள இரண்டு உறுப்பினர்களின் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கும் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் மேலும் இரண்டு சிம் கார்டை இணைத்துக்கொண்டால், அந்த சிம் கார்டு வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 50 எஸ்எம்எஸ், 100 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ரூ.100 ஆக்டிவேஷன் ஒரு முறை செலுத்தினால், போதும் மாதம் மாதம் கட்ட வேண்டியது கிடையாது.
ரூ. 999 பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் பிளான் சலுகைகள்: இதுவும் ஒரு மாதாந்திர திட்டமாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice
Calls), ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 75 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், 255 ஜிபி ரோலோவர் டேட்டா கிடைக்கும்.
மீதம் உள்ள டேட்டைவை அடுத்த மாதம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதுமட்டுமல்லாமல், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தோடு, ரூ. 100 செலுத்தினால், உங்களது குடும்பத்தில் உள்ள மூன்று உறுப்பினர்களின் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் மேலும் மூன்று சிம் கார்டுகளை இணைத்துக்கொண்டால், அந்த சிம் கார்டு வாடிக்கையாளர்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த ரூ.100 ஆக்டிவேஷன் கட்டணம் முதல் மாதம் கட்டினால் போதுமானது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications