ஆப்பிள் நிறுவனத்திற்கு பிறகு உலகின் 2 வது பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ்! அடுத்த குறி ஆப்பிள் தான்!

|

இந்தியாவின் முதன்மை நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், உலகின் மிக பெரிய பிராண்ட் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தை தற்பொழுது பிடித்துள்ளது. இந்த செய்தி உண்மையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்தியர்களை இச்செய்தி நம்பமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020

ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020

உலகளாவிய பிராண்ட் டிரான்ஸ்ஃபோரம்ஷன் நிறுவனமான ஃபியூச்சர் பிராண்ட் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020 பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆப்பிளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிராண்டாக மதிப்பிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்குப் பின்னர் ரிலையன்ஸ் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனங்கள்

பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனங்கள்

ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020 பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் வழக்கம் போல முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பட்டியலில் உலக பிரபலமான சாம்சங், நைக், நெட்ஃபிக்ஸ், மைக்ரோசாப்ட், ஏஎஸ்எம்எல், பேபால் போன்ற நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

PWC 2020 பட்டியலில் என்ன இடம் தெரியுமா?

PWC 2020 பட்டியலில் என்ன இடம் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்திற்குப் பிறகு உலகின் 2 வது மிக பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் 2 வது இடத்தில் நிற்கிறது, சாம்சங் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் கூட, ரிலையன்ஸ் நிறுவனம் பிடபிள்யூசி (PWC) 2020 பட்டியலில் 91 வது இடத்தில் தான் உள்ளது என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இந்த பட்டியல் எதற்கானது, எதனால் ரிலையன்ஸ் இரண்டாவது இடத்திற்கு வந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஃபியூச்சர் பிராண்ட் கூறியது என்ன?

ஃபியூச்சர் பிராண்ட் கூறியது என்ன?

உலகளாவிய பிராண்ட் டிரான்ஸ்ஃபோரம்ஷன் நிறுவனமான ஃபியூச்சர் பிராண்ட் கூறுகையில், "மொத்தத்தில், இந்த ஆண்டு 15 புதிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது, அவர்களில் ஏழு நிறுவனங்கள் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020 என்பது உலகளாவிய கருத்து ஆய்வாகும்.

சார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும்! ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்!சார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும்! ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்!

சிறந்த 100 நிறுவனங்களை நிதி வலிமை

சிறந்த 100 நிறுவனங்களை நிதி வலிமை

பியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020 கருத்தாய்வின் முடிவுப்படி, இது PwC இன் உலகளாவிய சிறந்த 100 நிறுவனங்களை நிதி வலிமையை விட புலனுணர்வு வலிமையின் சந்தை மதிப்பின் மூலம் மறுவரிசைப்படுத்துகிறது. இது நுகர்வோர் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகத் துல்லியமான மதிப்பீடு

மிகத் துல்லியமான மதிப்பீடு

இது உலகின் முன்னணி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது, கடந்த ஆண்டுகளில் இவை எவ்வாறு செயல்பட்டன மற்றும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி குறித்த துல்லியமான மதிப்பீட்டை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mukesh Ambani's Reliance Becomes World’s 2nd Biggest Brand After Apple : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X