மாதம் ரூ.299 போதும்.. 3,000 ஜிபி டேட்டா வரும்.. ஜியோ, ஏர்டெல் பொழப்பில் மண்ணள்ளி போட்ட KFON!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை ஓரங்கட்டும் வகையிலான மலிவான திட்டங்களை கேஎஃப்ஓஎன் (KFON) அறிவித்துள்ளது. 20 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ.299 வீதம் 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல், 9 மலிவு விலை திட்டங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் (Vodafone) போன்ற தனியாருக்கு சொந்தமான டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் மட்டும் இன்டர்நெட் (Internet) சேவையை வழங்கி வருகின்றன. நாட்டில் நாள்தோறும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவைகள் போய் சேரவில்லை.

அதற்கு டெலிகாம் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், நம் நாட்டில் அவ்வளவு கோடி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். அதற்காக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அடித்தட்டு மக்களிடையே இன்டர்நெட் சேவையை கொண்டு சேர்க்க முடியவில்லை.
ஆனால், கேரள மாநில அரசு, நாட்டிலேயே முதல் முறையாக இன்டர்நெட் சேவை வழங்கும் அரசாங்கமாக கேஎஃப்ஓஎன் திட்டத்தின் வாயிலாக உருவெடுத்துள்ளது. இந்த கேஎஃப்ஓஎன் திட்டம் 20 ஏழை லட்சம் குடும்பங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவை வழங்குவதையும், மற்றவர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் வழங்குவதை விட மலிவான விலையில் இன்டர்நெட் சேவை வழங்குவதையும் அடிப்படையாக கொண்டது.
இந்த கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (Kerala Fibre Optic Network) அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஜூன் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதோடு 9 மலிவு விலை திட்டங்களை வெளியிட்டார். இந்த திட்டங்களை பார்த்தால், நீங்களே "கேரளாவுக்கு குடியேறிவிடலாம் போலயே" என்று சிந்திப்பீர்கள். இப்போது அந்த திட்டங்கள் குறித்து காண்போம்.
ஒரு மாதத்திற்கு ரூ. 399 வீதம் 6 மாதத்திற்கு ரூ.2,394 செலுத்தினால், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் 4,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ. 449 வீதம் 6 மாதத்திற்கு ரூ.2,694 செலுத்தினால், 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 5,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ. 499 வீதம் 6 மாதத்திற்கு ரூ.2,994 செலுத்தினால், 75 எம்பிபிஎஸ் வேகத்தில் 4,000 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஒரு மாதத்திற்கு ரூ. 599 வீதம் 6 மாதத்திற்கு ரூ.3,594செலுத்தினால், 75 எம்பிபிஎஸ் வேகத்தில் 5,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ. 799 வீதம் 6 மாதத்திற்கு ரூ.4,794 செலுத்தினால், 150 எம்பிபிஎஸ் வேகத்தில் 5,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ. 999 வீதம் 6 மாதத்திற்கு ரூ.5,994 செலுத்தினால், 200 எம்பிபிஎஸ் வேகத்தில் 5,000 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஒரு மாதத்திற்கு ரூ. 1,249. வீதம் 6 மாதத்திற்கு ரூ.7,494 செலுத்தினால், 250 எம்பிபிஎஸ் வேகத்தில் 5,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். இவற்றில் 2 மலிவான திட்டங்கள் உள்ளன. முதலாவதாக ஒரு மாதத்திற்கு ரூ.299 வீதம் 6 மாதத்திற்கு ரூ.1,794 செலுத்தினால், 20 எம்பிபிஎஸ் வேகத்தில் 3,000 ஜிபி டேட்டா வழங்கப்படும். இரண்டாவதாக ஒரு மாதத்திற்கு ரூ.349 வீதம் 6 மாதத்திற்கு ரூ.2,094 செலுத்தினால், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3,000 ஜிபி டேட்டா வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








