நெருங்கும் கெடு.. ஜிமெயில் டெலிட் பாலிசி.. இந்த 2 தப்ப பண்ணாதீங்க.. பாஸ்வேர்ட் நியாபகம் இருக்கா?
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய டெலிட் பாலிசியின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்கள் (Inactive Gmail Accounts) நிரந்தரமாக டெலிட் செய்யப்பட உள்ளன. ஆகவே, உங்களது அக்கவுண்ட் பயன்படுத்தப்படாமல் இருக்கும்பட்சத்தில், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், வங்கி சேவைகள் தொடங்கி ஆதார் கார்டு சேவைகள் வரை ஜிமெயில் அக்கவுண்ட் கட்டாயமாக தேவைப்படுகிறது. இதனால், அதைப்பற்றி முழுமையாக தெரியாத மக்களும் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

இவர்களில் பல கோடி பேர் ஜிமெயில் அக்கவுண்ட்டை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்திவிட்டு, அதன் பின்பு கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனாலேயே, பலருக்கு ஜிமெயில் அக்கவுண்ட்டின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கூட நியாபகம் இருக்காது. இதுபோன்ற செயல் நமக்கு சாதாரணமாக தோன்றலாம்.
ஆனால், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் ஜிமெயில் அக்கவுண்ட்களை பராமரிக்கும் கூகுள் நிறுவனத்துக்கு பயன்படுத்தாத அக்கவுண்ட்கள் மிகப்பெரும் தலைவலியாக இருக்கும் என்பதே உண்மை. இதனால், கூகுள் நிறுவனம் புதிய அக்கவுண்ட் பாலிசியை கொண்டு வந்துள்ளது. இந்த பாலிசியின்படி 24 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்கள் நிரந்தரமாக டெலிட் செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த பாலிசியின்படி ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் போட்டோஸ் (Google Photos), யூடியூப் (YouTube), காலண்டர் (Calendar) மற்றும் டிரைவ் (Drive) ஆகிய அனைத்து அக்கவுண்ட்களும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படும். இதனால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள், போட்டோக்கள், வீடியோக்கள் மீண்டும் கிடைக்காமலேயே போக வாய்ப்புள்ளது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், அக்கவுண்ட் டெலிட் செய்யும் பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கப்படுகின்றன. ஆகவே, இன்னும் கால அவசாகம் இருக்கிறது. இந்த இடைவெளியில் 24 மாதங்களும் மேலாக கூகுள் அக்கவுண்ட்டை யாராவது பயன்படுத்தாமல் வைத்திருந்தால், உடனே பயன்படுத்த தொடங்குங்கள்.
இதுபோன்று யாரேனும் பயன்படுத்தாமல் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். கூகுள் நிறுவனத்தின் இன்ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட் பாலிசியின் (Inactive Google Account Policy) படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, நீங்கள் அதை பயன்படுத்திருக்க வேண்டும். இதில், ஜிமெயில் அக்கவுண்ட்டை லாகின் செய்வது, இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது உள்ளிட்டவை அடங்கும்.
இப்படி செய்ய கட்டாயமாக மறந்து விடாதீர்கள். அதேபோல, வரும் காலங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜிமெயில் மட்டுமல்லாமல், அதன் மூலம் பயன்படுத்தும், டாக்ஸ் (Docs), மீட் (Meet), டிரைவ், யூடியூப், காலண்டர், கூகுள் போட்டோஸ் போன்ற ஆப்களையும் அடிக்கடி லாகின் செய்து லாக் அவுட் செய்யும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படவில்லை என்றால், அதில் இருக்கும் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அவை திரும்ப கிடைப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட் பாலிசியின் கீழ் டெலிட் செய்யப்படும் அக்கவுண்ட்டின் ஐடி போன்று மீண்டும் யாராலும் உருவாக்க முடியாது.
இப்படி பல்வேறு சிக்கல்கள் புதிய பாலிசியில் இருக்கிறது. ஆகவே, ஜிமெயில் அக்கவுண்ட்டை மீண்டும் பயன்படுத்துவது மட்டுமே நல்லது. ஒருவேளை நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை மறந்திருக்கும்பட்சத்தில், ஜிமெயிலை ஓப்பன் செய்யும்போது, கீழே தோன்றும் ஃபர்கெட் இமெயில் (Forget Email) டேபை கிளிக் செய்து முதலில் ஐடியை ரிக்கவர் செய்யுங்கள். அதன்பின்பு அதை வைத்து ஃபர்கெட் பாஸ்வேர்ட் (Forget Password) கொடுத்து பாஸ்வேர்ட்டையும் ரிக்கவர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








