கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை!

|

கூகுள் தேடுதளத்தில் ஜூன் மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் டாப் இடத்தில் இதுதான் இடம்பெற்றுள்ளது.

மாதந்தோறும் அதிகம் தேடப்படும் விஷயங்கள்

மாதந்தோறும் அதிகம் தேடப்படும் விஷயங்கள்

கூகுள் நிறுவனத்தில் மாதந்தோறும் அதிகம் தேடப்படும் விஷயங்கள் குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஜூன் மாதம் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜூன் மாதத்தில் இந்தியர்கள் தேடியவை

ஜூன் மாதத்தில் இந்தியர்கள் தேடியவை

இந்த காலக்கட்டமான ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியவை என்னவென்ற பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பிரதானமான ஒன்றாக உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்

கொரோனா வைரஸ் பிரதானமாக இருந்தாலும் முதல் இடம் பிடித்திருப்பது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தான். சுஷாந்த் சிங் தற்கொலை விவரங்கள், மரணத்திற்கான காரணம் குறித்த தேடல்களே அதில் இடம்பெற்றுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை

சுஷாந்த் சிங் தற்கொலை

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமடைந்தவர்கள். 34 வயதான இவர் கடந்த 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை செய்தி நிறுவனங்களால் விவாதத்திற்குள் உட்படுத்தப்பட்டது. அதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனை வைரஸ் தேடலானது மே மாதத்தை விட 66 சதவீதம் ஜூன் மாதத்தில் குறைந்திருக்கிறது என தெரிகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

அதேபோல் இணையத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான செய்திகள், தடுப்பூசி குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. இதில் பதஞ்சலி மருந்து, உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு போன்றவைகள் இடம்பெற்றுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று குறித்த கேள்விகள்

கொரோனா நோய்த் தொற்று குறித்த கேள்விகள்

கூகுள் அறிவிப்பின்படி ஜூன் மாதத்தில் அதிகம் தேடப்பட்ட கொரோனா நோய்த் தொற்று குறித்த கேள்விகளை பார்க்கலாம். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எந்த முகக்கவசம் சிறந்தது?. நியூசிலாந்து கொரோனாவை எப்படி தடுத்தது?. கொரோனா வைரஸ் பலவீனமடைகிறதா? போன்ற கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தது.

அதிகம் தேடப்பட்ட மாநிலங்களி

அதிகம் தேடப்பட்ட மாநிலங்களி

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அதிகம் தேடப்பட்ட மாநிலங்களில் கோவா முதல் இடத்தையும் டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

சூரிய கிரகணம் மற்றும் தந்தையர் தினம்

சூரிய கிரகணம் மற்றும் தந்தையர் தினம்

கூகுள் வைரஸ் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் சுஷாந்த் சிங் மரணம், கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள், சூரிய கிரகணம் மற்றும் தந்தையர் தினம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
These topics are indians searched on google in june month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X