இந்திய மாணவிகள் கண்டறிந்த சிறுகோள்: விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியது என்ன?

|

இந்திய மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக பல்வேறு புதிய தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை மாணவர்கள் செயல்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றனர்

 மாநிலம், சூரத் எனும் பகுதியை

அதன்படி குஜராத் மாநிலம், சூரத் எனும் பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் ஹவாய் பல்கலைக்கழக டெலஸ்கோப் எடுத்த படங்களின் மூலம் பூமிக்கு செல்லும் சிறுகோள் ஒன்றை கண்டறிந்துள்ளதாக தனியார் இந்திய விண்வெளி கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சிறுகோள் செவ்வாய் கிரகத்திற்கு

தற்சமயம் இந்தச் சிறுகோள் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் காணப்படுகிறது எனவும், பத்து லட்சம் ஆண்டுகளில் பூமியை கடக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த மாணவகளுக்கு பயிற்சி வழங்கிய ஸ்பேஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் கூறியுள்ளது.

 சிறுகோளுக்கு எப்போது பெயரிட

மேலும் அந்த சிறுகோளுக்கு எப்போது பெயரிட வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்கிறார். விண்வெளி வீரராக விரும்பு மாணவி வைதகி வெக்காரியா. தற்காலிகமாக ஹெச்எல்வி2514 என்று சிறுகோள்களுக்கு பெயரிட்டுள்ளனர். இதன் சுற்றுப் பாதையை நாசா உறுதிப்படுத்திய பின்னரே அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படலாம் என ஸ்பேஸ் இந்தியாவின் செயதித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!

பள்ளிப்படிப்பில் சுட்டியாக விளங்கும்

பின்னர் பள்ளிப்படிப்பில் சுட்டியாக விளங்கும் மாணவி ராதிகா லக்கானி கூறியது என்னவென்றால் எங்கள் வீட்டில் டிவி இல்லை, அதனால்தான்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது என்று கூறினார். மேலும் சர்வதேச வானியல் தேடல் அமைப்புடன் (ஐஏஎஸ்சி) சேர்ந்து ஸ்பேஸ் இந்தியா நடத்திய விண்வெளி ஆய்வுப் பயிற்சியின்போது சிறுகோளை அந்த இரு மாணவிகளும் கண்டறிந்துள்ளனர்.

அதிநவீன விண்கலங்களை

விண்வெளிக்கு அதிநவீன விண்கலங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா,ஐரோப்பா ஒன்றியம், இந்திய உள்ளிட்ட பல நாடுகள் அனுப்பி
பல்வேறு சாதனை புரிந்து உள்ளன. ஆனால் சமீபத்தில் முதன் முறையாக அரபு ஆமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை
அனுப்பி புதிய சாதனை படைத்துள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களே: இலவச 1 ஜிபி டேட்டா வேண்டுமா- இத பண்ணுங்க!ஏர்டெல் வாடிக்கையாளர்களே: இலவச 1 ஜிபி டேட்டா வேண்டுமா- இத பண்ணுங்க!

செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின்

இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும் என்றும், தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படிஎன்பது குறித்த அமீரகத்தின் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும். சுருக்கமாக தினசரி மற்றும் பருவகால மாற்றங்களை தெரிந்துகொள்ளவும், முதன்முறையாக செவ்வாய் வளிமண்டலத்தின் முழுமையான படத்தை வழங்குவதையும் இந்த ஆய்வுக்கான விண்கலம் நோக்கமாகக்
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
School Girls in India Discover Earth-Bound Asteroid Which Is Presently Near Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X