இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ பேமெண்ட் (UPI payment) சேவையை மக்கள் இப்போது பெரியளவில் பயன்படுத்த துவங்கியிருக்கிறனர். கையில் ரொக்கமாக காசு இல்லாவிட்டாலும், கையில் ஸ்மார்ட்போன் இருக்கும் தைரியத்தோடு வெளியில் கடைக்கு செல்கின்றனர்.
எந்த செலவாக இருந்தாலும், கையில் ரொக்கமாக காசு இல்லாவிட்டால் என்ன? அதான், கையில் போன் இருக்கிறதே, போனில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), வாட்ஸ்அப் பே (WhatsApp Pay), பேட்டியம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்ஸ் (UPI Apps) இருக்கிறதே. சுலபமாக கட்டணத்தை செலுத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இப்போது எளிமையாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.

இன்டர்நெட் வசதி இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? எப்படி? (Can I make UPI payments without internet access? How?):
ஆனால், சில நேரங்களில் இன்டர்நெட் வசதி இல்லாமல் அல்லது இன்டர்நெட் சேவை வேலை செய்யாமல், கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் சிக்கலை சந்திக்கிறார்கள். இது ஒரு பெரிய சிக்கல் இல்லை என்றாலும், நமக்குள் ஒரு பதட்டம் உருவாக்கவே செய்கிறது. இன்டர்நெட் சேவை இல்லாமல் UPI பேமெண்ட் செலுத்துவதில் மக்கள் இப்போது சிரமங்களை சந்திக்கிறார்கள். அப்படி சிக்கலை சந்திக்காமல் இருக்க, இந்த ட்ரிக் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதும்.
இன்டர்நெட் சேவை இல்லாமலும் கூட, உங்களால் UPI மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். இன்டர்நெட் அல்லது இணையம் (Internet) இல்லாத UPI பேமெண்ட்களை செய்வது எப்படி என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப்போகிறோம். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது இணையம் சரியாக வேலை செய்யாததால் UPI பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
Google Pay, PhonePe, Paytm போன்ற UPI கட்டணத்தைப் பயன்படுத்தும் போது, இனி இணையச் சிக்கலை எதிர்கொண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம். இன்டர்நெட் சேவை இல்லை என்றால், நீங்கள் USSD சேவையைப் பயன்படுத்தி பணத்தை இப்போது செலுத்த முடியும். ஆன்லைன் கட்டணத்தை செலுத்தும் பொழுது, நீங்கள் இணைய சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் *99# என்று டைப் செய்யவும்.

முதலில் உங்கள் வங்கி விபரங்களை ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்:
இது கட்டமைக்கப்படாத துணை சேவை என்ற தரவு சார்ந்த மொபைல் வங்கிச் சேவையாகும். இது நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் வங்கிச் சேவைகளைக் கொண்டு வருகிறது. நீங்கள் இதை ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் 13 மொழிகளில் பயன்படுத்தலாம். UPI பின்னை மாற்றுவது முதல், இணைய சேவை இல்லாமல் பணம் அனுப்பும் வசதியை வரை எல்லாவற்றையும் இந்த முறைப்படி நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் செய்து முடிக்கலாம்.
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் *99# டயல் செய்யுங்கள்.
- உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
- உங்கள் விருப்பத்திற்கேற்ற மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர் உங்கள் வங்கியின் பெயரை டைப் செய்ய வேண்டும்.
- உங்கள் எண்ணுடன் இணைக்கப்படும் வங்கிக் கணக்குகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
- இப்போது உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களை காலாவதி தேதியுடன் உள்ளிட்ட வேண்டும்.
- இதை சரியாக செய்துவிட்டால் போதும்.
- அடுத்து எப்போது வேண்டுமானலும் இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்த முடியும்.
இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்த என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் மொபைலில் *99# டயல் செய்து, பணம் அனுப்ப 1 என்று அழுத்தவும்.
- நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த நபரின் UPI ஐடி அல்லது ஃபோன் எண்ணை டைப் செய்யவும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
- உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.
- இதைச் செய்த பிறகு, உங்கள் கட்டணம் செலுத்தப்படும்.
முக்கிய குறிப்பு: இந்த சேவையின் மூலம் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications