கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
அப்புறம் என்னப்பா.. கேபிள் டிவி கனெக்ஷனை கட் பண்ணிட வேண்டியது தானே? என்று கேட்கும்படியான ஒரு வேலையை.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ செய்துள்ளது. மாதத்திற்கு வெறும் ரூ.29 முதல் தொடங்கும் 2 புதிய ஜியோசினிமா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது!
ஜியோ சினிமா (JioCinema) ஆப்பிற்கான இந்த 2 திட்டங்களையும் புதிய திட்டங்கள் என்றும் கூறலாம் அல்லது அதன் பிரீமியம் சந்தா திட்டத்தின் மீதான விலைக்குறைப்பு என்றும் கூறலாம். ஜியோசினிமா பிரீமியம் என்பது ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் உட்பட ஜியோசினிமா தளத்தின்கீழ் கிடைக்கும் பிரீமியம் கன்டென்ட்டிற்கான ஒரு கட்டண சந்தா திட்டமாகும்.

முன்னதாக இது மாதத்திற்க்கு ரூ.99க்கு அணுக கிடைத்தது. இனிமேல் இது மாதத்திற்கு வெறும் ரூ.29க்கு அணுக கிடைக்கும். அதாவது ஜியோ நிறுவனமானது அதன் ஓவர்-தி-டாப் (ஓடிடி) பிளாட்ஃபார்மின் விலையை மூன்றில் இரண்டு பங்கு குறைத்துள்ளது. ரூ.99 சந்தா திட்டமானது, 1 ஆண்டு திட்டமாகவும் (ரூ.999 க்கு) அணுக கிடைத்தது. இவ்விரு திட்டங்களுமே விளம்பரங்கள் இல்லாமல் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கின.
ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.29 திட்டமானது 1 டிவைஸ்க்கான ஆதரவை மட்டுமே வழங்கும். ஆனால் மற்றொரு புதிய திடமான ரூ.89 ஆனது பழைய ரூ.99-ஐ போலவே 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கும். மாதத்திற்கு ரூ.89 என்கிற செலவின்கீழ் கிடைக்கும் இந்த திட்டம் "ஜியோசினிமா பேமிலி பிளான்" என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் ஏற்கனவே ஜியோ சினிமா பிரீமியம் மெம்பராக (JioCinema Premium Member) இருந்தால், எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல்.. ஜியோ சினிமா பேமிலி பிளானின் (JioCinema Family Plan) கீழ் கிடைக்கும் கூடுதல் பலன்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமாக.. தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் ஆனது தொடர்ந்து இலவசமாக அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இது ஜியோ சினிமா தளத்தின் விளம்பர ஆதரவு சலுகையின் (Ad-supported offering) ஒரு பகுதியாகவே அணுக கிடைக்கும். அதாவது ஐபிஎல் நேரலைக்கு இடையே விளம்பரங்கதோன்றும் என்று அர்த்தம்.

ஜியோ சினிமா தளமானது, உலகின் மிகப்பெரிய ஸ்டுடியோக்களான பீகாக், எச்பிஓ, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி ஆகியவற்றின் வழியாக - ஹாலிவுட் திரைப்படங்கள் (Hollywood Movies), மிகப்பெரிய உலகளாவிய சீரீஸ் (Global Series) மற்றும் மூவீ பிரீமியர்களுக்கான (Movie Premier) அணுகலை வழங்குகிறது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game Of Thrones), ஹவுஸ் ஆஃப் தி டிராகன் (House Of The Dragon), ஓப்பன்ஹெய்மர் ( Oppenheimer), பார்பி (Barbie) மற்றும் இன்னும் பல டைட்டில்கள் இப்போது தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் அணுக கிடைக்கிறது.
கடந்த ஆண்டு, வயாகாம்18 மீடியா (Viacom18 Media) நிறுவனமானது வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரி இன்க் (Warner Bros Discovery Inc) நிறுவனத்தின் பிரத்யேக கன்டென்ட்களை இந்தியாவில் ஸ்ட்ரீமிங் செய்ய பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த கன்டென்ட்டில் சக்ஸஷன் (Succession) மற்றும் தி லாஸ்ட் ஆஃப் அஸ் (The Last of Us) ஆகியவைகளும் அடங்கும்.
இதுதவிர்த்து ஜியோ சினிமா மெம்பர்கள் - கலர்ஸ் தொகுப்பில் இருந்து கிடைக்கும் அனைத்து உள்ளூர் மொழி சேனல்களுக்கான ஆரம்ப அணுகலை பெறுவார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை போலவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பாகவே ஜியோ சினிமா வழியாக சீரியல்களை பார்க்கலாம். கூடுதலாக, 20 க்கும் மேற்பட்ட வயாகாம்18 நெட்வொர்க் டிவி சேனல்களுக்கான அணுக்களும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








