ஏர்டெல் வாடிக்கையாளர்களே: இலவச 1 ஜிபி டேட்டா வேண்டுமா- இத பண்ணுங்க!

|

ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு மட்டும் 1 ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

1 ஜிபி அதிவேக டேட்டா

1 ஜிபி அதிவேக டேட்டா

ஏர்டெல் குறிப்பிட்ட பயனர்களுக்கு 1 ஜிபி அதிவேக டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்த இலவச டேட்டா சிறப்பு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கிறது, ஏர்டெல் தனது பயனர்களுக்கு வழங்கும் திட்டத்தோடு இந்த 1 ஜிபி கூடுதல் தரவை வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் கூடுதல் தரவானது மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ.48 விலையில் டேட்டா பேக் ரீசார்ஜ்

ரூ.48 விலையில் டேட்டா பேக் ரீசார்ஜ்

இந்த இலவச தரவு குறித்து முதலில் டெக் போரம் உறுப்பினர் தெரிவித்தார். ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ரூ.48 விலையில் டேட்டா பேக் ரீசார்ஜ் செய்யும் போது 4 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

கூடுதல் 1 ஜிபி டேட்டா

கூடுதல் 1 ஜிபி டேட்டா

டெலிகாம் நிறுவனம் தங்கள் கணக்கில் வரவுவைக்கப்பட்ட கூடுதல் 1 ஜிபி டேட்டாவை சந்தாதாருக்கு இலவசமாக வழங்குவது குறித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதோடு இதில் வழங்கப்படும் 1 ஜிபி தரவானது மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் இது சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மேலும் ஓர் புதிய சலுகை

மேலும் ஓர் புதிய சலுகை

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனத்திலிருந்து விங்க் மியூசிக் ஆனது #ExpresswithHellotune எனும் ஒரு புதிய சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களின் தங்களின் தற்போதைய மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் இசை மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

விருப்பமான பாடல்கள்

விருப்பமான பாடல்கள்

அதாவது பயனர்கள் விரும்பும் பாடலை ஹெலோ ட்யூன் ஆக வைப்பதின் வழியாக நமது தற்போதைய மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும்.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!

14நாட்களுக்கு ஒருமுறை  ஹெலோ டியூன்

14நாட்களுக்கு ஒருமுறை ஹெலோ டியூன்

குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ஹலோ ட்யூன்ஸ் அனைத்து ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறப்பு சலுகையாக ஏர்டெல் ஹலோ ட்யூன்களை அனைத்து நான்-ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் 14நாட்களுக்கு ஒருமுறை #ExpresswithHellotune இன் ஒரு பகுதியாக இருக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் கணக்கான ஏர்டெல் வாடிக்கையாளர்கள்

மில்லியன் கணக்கான ஏர்டெல் வாடிக்கையாளர்கள்

தற்சமயம் பல்வேறு மக்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்யும் நிலையில் #ExpressWithHellotune மில்லியன் கணக்கான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இசையை, அவர்களை இணைப்பதற்கான ஒரு வழியாக கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள்

6 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள்

#ExpresswithHellotune ஆனது அனைத்து ஏர்டெல் பயனர்களையும் ஒரு ஹலோ ட்யூனாக ஒரு பாடலை அமைக்க அழைக்கிறது.பின்பு பயனர்கள் விங்க் மியூசிக் பயன்பாட்டில் 6 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை இலவசமாக ஹெலோட்டூனாக அமைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Offers 1GB free data for this prepaid recharge plan Sources said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X