பிழையை சுட்டிக்காட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அலெர்ட் பண்ணிய இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்.!

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலரை சன்மானமாகவழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,36,875 ரூபாய்க்கு அந்த தொகை நிகராகும்.

லட்சுமண் முத்தையா

லட்சுமண் முத்தையா

வெளிவந்த தகவலினபடி, Bug Bounty Program எனும் திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். அதாவது வாடிக்கையாளர்களின் மைக்ரோசாப்ட் கணக்குகளை எளிதில் ஹைஜெக் (hijack)செய்யப்படலாம் என்ற பாதிப்பை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறிந்ததற்காக இந்த சன்மானம் லட்சுமண் முத்தையா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

குறிப்பாக எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்ற பிழையை முத்தையா கண்டறிந்தார் என்று கூறப்படுகிறது. எனவே இது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மைக்ரோசாப் நிறுவனத்திற்கு தெரிவித்ததன் மூலம் முத்தையா இந்த சன்மானத்தை பெற்றுள்ளார்.

முன்பும் முத்தையா இதே போல்

மேலும் இதற்கு முன்பும் முத்தையா இதே போல் இன்ஸ்டாகிராமிலும் Bug ஒன்றை கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் மைக்ரோசாப் நிறுவனம் அறிமுகம் செய்த சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனத்தின் சிறப்பம்சங்களை இப்போது வரிவாகப் பார்போம்.

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது இன்டெல் கோர் ஐ3 முதல் ஐ7 வரை 11th Gen இன்டெல் இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சாதனத்தின் பேஸ் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் 32ஜிபி ரேம்,1டிபி எஸ்எஸ்எ வரை கான்பிகர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0-ஐ ஆதரிக்கிறது இந்த அட்டகாசமான சாதனம்.

கே பிக்சல்-சென்ஸ் டச்

இந்த புதிய சாதனம் 4கே பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மைக்ரோசப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அதேபோல் மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 சாதனம் அதிகநேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. எனவே கணினி அதிக நேரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த சாதனம் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், யூ.எஸ்.பி-ஏ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

டால்பி ஆடியோ வசதி

டால்பி ஆடியோ வசதி

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 சாதனத்தில் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் ஈசிம் மற்றும் நானோ சிம் என இரண்டிலும் வேலை செய்கிறது.

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.83,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,58,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Best Mobiles in India

English summary
Reward given by Microsoft to an Indian researcher who pointed out the error: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X