அப்புறம் என்ன? Google கதை முடிஞ்சதுனு அறிவிச்சிடலாமா? புதிய திறன்களுடன் ChatGPT 4 அறிமுகம்! என்ன ஸ்பெஷல்?
ஏற்கனவே கூகுள் (Google) நிறுவனத்திற்கும், சுந்தர் பிச்சைக்கும் (Sundar Pichai) பல வகையான "மண்டை குடைச்சல்களை" கொடுத்து கொண்டிருக்கும் சாட்ஜிபிடி தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது. புதிய மேம்பாடுகள் மற்றும் புதிய திறன்களுடன் சாட்ஜிபிடி 4 (ChatGPT 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி 4 என்றால் என்ன? இதற்கும் பழைய சாட்ஜிபிடி 3.5-க்கும் உள்ள வேறுபாடு என்ன? சாட்ஜிபிடி 4 வழியாக என்னென்ன புதிய விஷயங்களை செய்யலாம்? சாட்ஜிபிடி 4-இன் வரம்புகள் (Limitations) என்ன? இது மைக்ரோசாஃப்ட் பிங் சேர்ச் (Bing Search) வழியாக அணுக கிடைக்குமா? இதோ பதில்கள்:

சாட்ஜிபிடி 4 என்றால் என்ன? சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் சாட்ஜிபிடி 4 என்பது முன்னதாக வெளியான சாட்ஜிபிடி 3.5 வெர்ஷனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது பழைய வெர்ஷன்களை விட மிகவும் ஆக்கப்பூர்வமானதாகவும், கடினமான பிரச்சனைகளை அதிக துல்லியத்துடன் தீர்க்கும் திறனையும் கொண்டுள்ளது.
சாட்ஜிபிடி 3.5 க்கும் சாட்ஜிபிடி 4 க்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? ஓப்பன் ஏஐ-யின் கூற்றுப்படி "ஒரு சாதாரணமான உரையாடலின் போது, ஜிபிடி 3.5 மற்றும் ஜிபிடி 4-க்கு இடையேயான வேறுபாடு மிகவும் நுட்பமாக இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பணியில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் போது தான் இந்த இரண்டிற்குமான வேறுபாடு வெளிப்படும்; ஜிபிடி 4-இன் திறமை தெரிய வரும்!
அதுமட்டுமின்றி, ஜிபிடி-4 ஆனது டெக்ஸ்ட்-ஐ ஜெனெரேட் (Generate Text) செய்யும் மற்றும் இமேஜ் மற்றும் டெக்ஸ்ட் இன்புட்களை (Image and text inputs) ஏற்கும். அதாவது இது இமேஜ், டயகிராம் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களை கூட படிக்கும். ஜிபிடி 3.5 உடன் ஒப்பிடும் போது இதுவொரு நல்ல முன்னேற்றமாகும். ஏனென்றால் சாட்ஜிபிடி3.5 ஆனது டெக்ஸ்ட்-ஐ மட்டுமே ஏற்றுக்கொள்ளும்!
புதியது தான், ஆனால் ஃபெர்பெக்ட் ஆனது இல்லை! சாட்ஜிபிடி 4 குறித்து பேசுகையில், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான (OpenAI CEO) சாம் ஆல்ட்மேன், "இது இன்னமும் குறைபாடுடையது தான், வரம்புக்குட்பட்டது தான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது யூசர் ஃபீட்பேக்கிற்கு (User Feedback) திறந்துவிடப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகளை யார் வேண்டுனாலும் சுட்டிக்காட்டலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி 4-இன் வரம்புகள்: முந்தைய வெர்ஷன்களை விட அதிக திறன்களை கொண்டிருந்தாலும் கூட, ஜிபிடி 4 ஆனது முந்தைய ஜிபிடி மாடல்களை போன்ற வரம்புகளையே கொண்டுள்ளது. அதாவது பழைய வெர்ஷன்களை போலவே சாட்ஜிபிடி 4-இன் அறிவுசார் தளம் (Knowledge Base) "செப்டம்பர் 2021 வரை" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், செப்டம்பர் 2021 க்கு பிறகு நடந்த நிகழ்வுகளை பற்றிய அறிவு சாட்ஜிபிடி 4 வெர்ஷனிடமும் இருக்காது. இதனால் தான் ஓப்பன்ஏஐ நிறுவனமானது சாட்ஜிபிடி 4-ஐ "இன்னும் முழுமையாக நம்பகமானதாக இல்லை", "இது உண்மைகளின் மாயத்தோற்றம்", "இது பகுத்தறிவு பிழைகளை செய்யும்" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது
கூகுளின் போட்டியாளரான மைக்ரோ சாஃப்ட்டின் பிங் சேர்ச்சில் சாட்ஜிபிடி 4 கிடைக்குமா? ஆம் கண்டிப்பாக கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் சாட்ஜிபிடி 4 ஆனது ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் பிங் சேர்ச்சில் (Microsoft Bing Search) அணுக கிடைக்கிறது. அதை மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கூட உறுதிப்படுத்தியுள்ளது!


Click it and Unblock the Notifications