ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்பும் மக்களுக்கு மிகவம் பயன்படும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் விரைவில் ஆண்ட்ராய்டு 12-ஐ கொண்டுவர உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

கூகுள் நிறுவனம் அறிவித்த தகவலின்படி, இந்த புதிய ஆண்ட்ராய்டு 12 அப்டேட் ஆனது படிப்படியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த அப்டேட்-ல் மைக்ரோபோனை எந்தெந்த செயலிகள் பயன்படுத்துகின்றன என்பதை காட்ட ஒரு புதிய ஐகான் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த ஆண்ட்ராய்டு 12 வசதிக்கு ஒரு இனிப்பு பெயர் வைக்கப்படாமல் ஐஸ்க்ரீம் பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-க்கு ஸ்னோ கோன் என்ற பெயர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

நாம் இப்போது பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-க்கு பின்னணியில் ரெட்வெல்வெட் கேக் என்று பெயரிடப்பட்டது. இந்த தகவல் ஆண்ட்ராய்டு சோர்ஸ் கோட் வழியே கிடைத்தது. மேலும் இந்த ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் ஆனது உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இது தவிர ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ல் கான்வர்சேஷன் எனும் புதிய விட்கெட்ஸ் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது எப்படி செயல்படும் என்றால், நாம் தவறவிட்ட அழைப்புகள் குறுஞ்செய்திகள் போன்றவற்றை தெரிவிக்கும்.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

மேலும் இந்த புதிய அப்டேட் மூலம் ஸ்மார்ட்போன் திரையில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய அப்டேட் ஒரு புதிய யூஸர் இன்டர்பேஸைக் கொண்டு வரும் என்பதால், கண்டிப்பாக மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் புதிய டார்க் மோட் ஆப்ஷனை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

கடந்த சில மாதங்கள் டார்க் மோட் ஆப்ஷனை பரிசோதனை செய்து வந்தது கூகுள் நிறுவனம். இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த டார்க் மோட் ஆப்ஷனை எனேபில் செய்வதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் கண்டிப்பாக சேமிக்கப்படும். பின்பு இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
When will the Android 12 update be released? : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X