Home
News

என்ன சுந்தர் இப்படி ஆகிடுச்சு? இது உக்கிரமா இருக்கே.. ChatGPT 4 VS சாட்ஜிபிடி 3.5.. முக்கியமான 5 வேறுபாடுகள்!

"இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா" என்று கூகுள் (Google) நிறுவனத்தை புலம்ப வைத்து கொண்டிருக்கும் சாட்ஜிபிடி (ChatGPT) ஆனது இன்னும் கொஞ்சம் உக்கிரமாகி உள்ளது. அதாவது பல முக்கிய மேம்படுகளுடன் புதிய சாட்ஜிபிடி 4 (ChatGPT 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

மைக்ரோசாஃப்ட்டின் (Microsoft) நிதியுதவியை பெறும் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது இன்னும் சக்திவாய்ந்த, இன்னும் திறமையான ஏஐ மாடலான (AI Model) சாட் ஜிபிடி 4-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வெர்ஷனுக்கும் (New Verison) பழைய சாட்ஜிபிடி 3.5 வெர்ஷனுக்கும் (ChatGPT 3.5 Version) இடையேயான 5 முக்கியான வேறுபாடுகள் இதோ:

புதிய ChatGPT 4 VS பழைய சாட்ஜிபிடி 3.5.. முக்கியமான 5 வேறுபாடுகள்!

முதல் மற்றும் முக்கிய வேறுபாடு: சாட்ஜிபிடி 4 மற்றும் ஜிபிடி 3.5 ஆகியவற்றுக்கு இடையேயான மிகப்பெரிய அப்டேட் மற்றும் வேறுபாடு என்னவென்றால், சாட்ஜிபிடி 4-ஆல் படங்களை பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடியும் (Understanding the images). அதாவது ஜிபிடி 4 ஆனது ஜிபிடி 3.5-ஐ போல் டெக்ஸ்ட்-ஐ மட்டுமின்றி இமேஜையும் இன்புட் ஆக எடுத்துக்கொள்ளும்.

ஜிபிடி 4-ஆல் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் இன்புட் (Text and Image Input) ஆகிய இரண்டையும் "அலச" முடியும் என்றாலும் கூட அது டெக்ஸ்ட் வழியாகவே பதிலளிக்கும் (Response in Text Only) என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது ஜிபிடி 4-இல் டெக்ஸ்ட்டில் மீடியாவை உருவாக்கும் திறனை இன்னும் பெறவில்லை. ஆனால் இமேஜ், டயகிராம் (Diagram) மற்றும் ஸ்க்ரீன்ஷார்ட்களை (ScreenShot) இன்புட் ஆக ஏற்கும்.

இரண்டாவது வேறுபாடு: சாட்ஜிபிடி 4 தற்போது வரையிலாக சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus) வழியாக மட்டுமே அணுக கிடைக்கிறது. இந்த அப்டேட் எப்போது பொது மக்களுக்கு கிடைக்கும் என்கிற விவரத்தை ஓப்பன்ஏஐ நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் புதிய சாட்ஜிபிடி 4-ன் திறன்கள் பிங் சேர்ச்சில் (Bing Search) ஒருங்கிணைக்க தொடங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் (Microsoft) அறிவித்துள்ளது.

மூன்றாவது வேறுபாடு: ஓப்பன்ஏஐ-யின் கூற்றுப்படி, ஜிபிடி 4 ஆனது ஜிபிடி 3.5-ஐ விட மிகவும் நம்பகமானது, ஆக்கப்பூர்வமானது மற்றும் மிகவும் நுணுக்கமான வழிமுறைகளை கையாளக்கூடியது. இந்த 2 மாடல்களுக்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அவைகளில் ஜிபிடி 3.5-ஐ விட ஜிபிடி 4 சிறப்பாக செயல்பட்டுள்ளது.

நான்காவது வேறுபாடு: சாட்ஜிபிடி 4 பலவகையான மொழிகளுக்கான (Multilingual) ஆதரவை பெற்றுள்ளது. நேற்று வரையிலாக ஆங்கிலம் பேசுபவர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஏஐ உலகம் இன்றில்லை. ஏனென்றால் சாட்ஜிபிடி 4-ஆல் இத்தாலியன் (Italian), உக்ரேனியன் (Ukrainian ), கொரியன் (Korean) உட்பட 26 மொழிகளில் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு, உயர் துல்லியத்துடன் பதிலளிக்க முடியும்!

கடைசி மற்றும் ஐந்தாவது வேறுபாடு: "சாட்ஜிபிடி 3.5 உடன் ஒப்பிடும்போது ​​ஜிபிடி 4 ஆனது மிகவும் பாதுகாப்பானது மற்றும் ​​அனுமதிக்கப்படாத கன்டென்ட்டிற்கான (Disallowed content) கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போக்கை 82% குறைத்துள்ளோம். மேலும் ஜிபிடி 4 ஆனது எங்கள் கொள்கைகளுக்கு 29% அதிக இணக்கமானதாக உள்ளது" என்று ஓப்பன்ஏஐ கூறியுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Major Differences Between New ChatGPT 4 Version And Old ChatGPT 3 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X