மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவை தொடர்ந்து ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று உள்ளார் - இன்னொரு இந்தியர். அவர் தான் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் ஆன பவன் டவுலூரி!
பவன் டவுலூரி (Pavan Davuluri) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் (Microsoft Windows and Surface) புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு அமேசானில் சேருவதற்காக துறையை விட்டு விலகிய ப்ராடெக்ட் சீஃப் (Product Chief) ஆன பனோஸ் பனாயின் (Panos Panay) பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, பவன் டவுலூரி சர்ஃபேஸ் குழுவை (SurfaceTeam) மேற்பார்வையிட்டார், மைக்கேல் பரக்கின் (Mikhail Parakhin) விண்டோஸ் துறைக்கும் தலைமை தாங்கினார். மைக்கேல் பரக்கும் மற்றும் பனோஸ் பனாயியும் தத்தம் வேலைகளை துறந்த பிறகு, பவன் டவுலூரி விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் துறைகள் ஆகிய இரண்டையும் தன்கையில் எடுத்து கொண்டார்.
மைக்ரோசாப்டின் எக்ஸ்பீரியன்ஸஸ் மற்றும் டிவைஸ்களின் தலைவர் ( Microsoft's head of experiences and devices) ஆன ராஜேஷ் ஜா (Rajesh Jha), ஏஐ சகாப்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டிவைஸ்களையும், எக்ஸ்பீரியன்ஸ்களையும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்த, ஒரு முழுமையான அணுகுமுறையை கொண்டுவர இந்த முடிவு (பவன் டவுலூரி நியமனம்) நிறுவனத்திற்கு உதவும் என்று நம்புகிறார்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, எக்ஸ்பீரியன்ஸஸ் + டிவைஸ்கள் (E+D) பிரிவின் முக்கிய பகுதியாக விண்டோஸ் எக்ஸ்பீரியன்ஸஸ் மற்றும் விண்டோஸ் + டிவைஸ்கள் குழுக்களை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். இந்த குழுவை வழிநடத்தி பவன் டவுலூரி என்னிடம் ரிப்போர்ட் செய்வார். ஷில்பா ரங்கநாதன் (Shilpa Ranganathan) மற்றும் ஜெஃப் ஜான்சன் (Jeff Johnson) மற்றும் அவர்களது குழுக்கள் பவனுக்கு நேரடியாக ரிப்போர்ட் செய்வார்கள் என்றும் ராஜேஷ் ஜா கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பெரிய மாற்றம், ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) வளர்ச்சிக்காகவும் தான் என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது. இதற்காக பவன் டவுலூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை அவர் சிறப்பாக செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் எலான் மஸ்க், க்ரோக் ஏஐ (Grok AI) என்கிற தனது ஏஐ சாட்பாட்டை ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக மாற்றியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொது மக்களால் க்ரோக் ஏஐ சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ மாற்றியமைக்கவும் (Modification), மறுபகிர்வு (Redistribution) செய்யவும் முடியும். அதாவது ஆராய்ச்சியாளர்களால் மற்றும் டெவலப்பர்களால் ஓப்பன் சோர்சிங் க்ரோக் ஏஐ-ல் பணிபுரிய முடியும் மற்றும் க்ரோக்கின் எக்ஸ்ஏஐ திறன்களை (xAI abilities) மேம்படுத்த முடியும்.
இன்னொருபக்கம் ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனமானது, கூடிய விரைவில் அதன் சாட்ஜிபிடி-5 வெர்ஷனை (ChatGPT 5 Version) ரிலீஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபிடி-5 என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின்டு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 (Generative Pre-Trained Transformers 5) வெர்ஷனில் ஆட்டோநமஸ் முறையில் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் (AI Agents that can operate Autonomously) போன்ற புதிய திறன்கள் கொண்டுவரப்படலாம்.
இது கடந்த மார்ச் 2023 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட சாட்ஜிபிடி 4 வெர்ஷனின் "மேம்படுத்தப்பட்ட வாரிசாகவும்".. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் "நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏஐ மாடலாகவும்" வரும். இது எப்போது வெளியாகும் என்கிற சரியான தேதிகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இது அடுத்த சில மாதங்களில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








