Home
News

அந்த ஒரு வார்த்தை.. ரூ.1 கோடி சம்பளம்.. உதறி தள்ளிய இந்தியர்.. மைக்ரோசாப்ட் டூ விவசாயிகள் நலன்!

அமெரிக்காவில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் டெக்னிகல் புரோகிராமிங் மேனேஜராக பணிபுரிந்து ரூ.1 கோடி சம்பளம் பெற்ற இந்தியர் ஒருவர் ஒரேவொரு வார்த்தையில் தொழில்நுட்பத் துறை உதறி தள்ளிவிட்டு நாடு திரும்பி இருக்கிறார். இப்போது, அவரது செய்யும் தொழில் நம்மை வியப்படைய வைக்கிறது.

நம்மில் பலருக்கு படிக்கும்போதே மிகப்பெரும் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதிலும், உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தில் வேலை என்றால், வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு கூட அமெரிக்காவிலேயே செட்டிலாகவும் இங்கு பல இளைஞர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

ரூ.1 கோடி சம்பளம்.. உதறி தள்ளிய இந்தியர்.. மைக்ரோசாப்ட் டூ விவசாயிகள்!

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைப்பதென்பது எளிதானது அல்ல. குதிரைக்கொம்பு காரியமாகும். இருப்பினும், பல இந்தியர்களின் ஆளுமை திறன் அவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியம் வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ருசித் கர்க் (Ruchit Garg) என்பவரும் இடம்பெற்று இருக்கிறார்.

44 வயதான ருசித் கர்க் எம்சிஏ பட்டம் பெற்றவர். ஹைதராபாத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கியவர். அங்கு அவர் மூன்று ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதால், அமெரிக்காவின் வாஷிங்டன்னில் இருக்கும் மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் பணி அமர்த்தப்பட்டார். மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின்பு, திடீரென வேலையை உதறி தள்ளினார்.

அப்போது, டெக்னிகல் புரோகிராமிங் மேனேஜராக இருந்த அவருக்கு வருடாந்திர சம்பளமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பிய அவர் விவசாயிகளுக்காக ஹார்வெஸ்ட்டிங் (Harvesting) என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், அவரது தாத்தாவின் விவசாயம் மீது பற்று காரணமாக தொடங்கியதாக தெரிவிக்கிறார்.

ரூ.1 கோடி சம்பளம்.. உதறி தள்ளிய இந்தியர்.. மைக்ரோசாப்ட் டூ விவசாயிகள்!

இந்த ஹார்வெஸ்ட்டிங் நிறுவனம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்கவும், இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களைப் பெற்று தரவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் இந்தியாவில் 37 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து சமீபத்தில் ருசித் கர்க் பிரபல ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார். அப்போது, அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அவருக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதாக ஒரே வார்த்தையில் போட்டு உடைத்திருக்கிறார். அதோடு அங்கு தன்னையொரு பொருத்தமற்றவனாக உணர்ந்தாகவும், தான் எப்போதும் ஒரு தொழிலை நடத்தவே விரும்பியதாகவும் விளக்கி இருக்கிறார்.

இந்தியாவுக்கு திரும்பியபோது, அவரது இளைமை காலத்தில் தனது தாத்தா உத்தரப் பிரதேசத்தில் வைத்திருந்த மாம்பழ தோட்டத்தில் மலரும் நினைவுகளையும், அதை பராமரிக்க அவர் பட்ட துயரங்களையும் நினைவு கூர்ந்து, தனது ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை அர்த்தமுள்ளதாகவும், மனதுக்கு பிடித்தமானதாகவும் மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

அதன்படியே ஹார்வெஸ்ட்டிங் நிறுவனத்தை தொடங்கி இந்திய விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டி வருகிறார். நாங்கள் சிறுகுறு விவசாயிகள் அதிக பணம் சம்பாதிக்க உதவுகிறோம். விவசாயிகளுக்கு ஆலோசனை, விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற விளைப்பொருட்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களை சென்றடைய உதவுகிறோம்.

அதுமட்டுமல்லாமல், அவர்களது விளைபொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்களில் விற்க உதவுகிறோம் என்று சொல்லி முடித்துள்ளார். விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு இடைத்தரகர்கள் சொல்லும் விலையே அதன் தலையெழுத்தாக மாறிவிடுகிறது. இதை மாற்ற விவசாயிகள் மற்றும் நிறுவனங்களை நேரடியாக இணைக்க வேண்டியாக கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Techie Quits Rs 1 Crore Per Annum Job in Microsoft US to Start A Sartup For Farmers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X