ஆர்டருக்கு ரெடி.. பக்கா ஆபீஸ் லேப்டாப்.. டச் ஸ்கிரீன்.. லைட் வெயிட்.. 16 ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ஆபீஸ் செல்வோருக்கான பக்காவான அம்சங்கள் மட்டுமல்லாமல், விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ், மைக்ரோசாப்ட் 365 ஆப்ஸ், இன்டெல் ஐரிஸ் கிராபிக்ஸ் போன்ற பிரீயம் பண்டிலாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 3 (Microsoft Surface Laptop Go 3) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 3 அம்சங்கள் (Microsoft Surface Laptop Go 3 Specifications): இந்த கோ 3 லேப்டாப் 12.4 இன்ச் (1536 x 1024) பிக்சல்சென்ஸ் டச்ஸ்கிரீன் (PixelSense Touchscreen) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 330 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு 148 பிபிஐ (PPI), 3:2 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் எஸ்ஆர்ஜிபி (sRGB) கலர் ப்ரொஃபைல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சர்பேஸ் லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கொண்ட இன்டெல் கோர் ஐ5-1235யு (Intel Core i5-1235U) ப்ராசஸர் வருகிறது. இதுவொரு 12 ஜென் (12th Gen) வெர்ஷனாகும்.
அதேபோல விண்டோஸ் 11 ப்ரோ (Windows 11 Pro) ப்ராசஸர் மாடலும் வருகிறது. அதோடு இன்டெல் ஐரிஸ் எக்ஸ்ஈ கிராபிக்ஸ் (Intel Iris Xe Graphics) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. 720p ரெசொலூஷன் கொண்ட எச்டி (HD) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்பேஸ் லேப்டாப் டால்பி ஆடியோ ப்ரீமியம் (Dolby Audio Premium) சப்போர்ட் கொண்ட ஓம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் (Omnisonic Speakers) கொண்டுள்ளது.
அதேபோல டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக்ஸ் (Dual Far Field Studio Mics) வருகின்றன. ஃபர்ம்வேர் டிபிஎம் 2.0 (Firmware TPM 2.0) செக்யூரிட்டி சிப் கொண்டுள்ளது. அதோடு ஃபிங்கர்பிரிண்ட் பவர் பட்டன் (Fingerprint Power Button) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வை-பை 802 (Wi-Fi 6 802) மற்றும் ப்ளூடூத் 5.1 எல்ஈ (Bluetooth 5.1 LE) கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
மேலும், டைப்-சி டேட்டா, டிஸ்பிளேபோர்ட் மற்றும் சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு யுஎஸ்பி ஏ, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், சர்பேஸ் கனெக்ட் போர்ட் வருகிறது. அம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 40Wh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 15 மணி நேரம் பேக்கப் கொடுக்கக்கூடியது.
இந்த லேப்டாப் பேட்டரியோடு சேர்த்து, 1.12 கிலோ எடைக் கொண்டுள்ளது. பிளாட்டினம் கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த லேப்டாப், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய தளங்களில் இன்று முதல் (அக்டோபர் 19) ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.
இப்போது, ப்ரீ-ஆர்டர் செய்வோருக்கு ரூ.14,999 மதிப்புள்ள மார்ஷல் மேஜர் IV வயர்லெஸ் ஹெட்செட் காம்ப்ளிமென்ட்ரியாக வழங்கப்படுகிறது. வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இதில் விண்டோஸ் 11 ப்ரோ ஓஎஸ் கொண்ட 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.82,135ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.98,562ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 16 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,17,817ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,33,884ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ் கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.80,999ஆகவும், 16 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.100,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் மைக்ரோசாப்ட் ஏஐ-பவர்ட் டூல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மைக்ரோசாப்ட் 365 ஆப்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு மாதத்துக்கு மட்டுமே கிடைக்கும். ஆபீஸ் பயன்பாட்டுக்காக பக்காவான அம்சங்களுடன் லேப்டாப் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 3 மாடலை வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








