நம்ம ஜாதகம் Google கிட்ட எப்படி போச்சு தெரியுமா? மீண்டும் நிரூபித்த குரோம்!
நீங்கள் கூகுளில் (Google) எதையாவது தேடியிருந்தால், அதுதொடர்பான விளம்பரங்களும், செய்திகளும் அடுத்த நாளே நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களிலும், பிரவுசர்களிலும் வந்துகொண்டே இருக்கும். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?. அதுபோல உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே முதலில் கூகுள் குரோம் பிரவுசர் கொடுக்கும்.
"பரவால்லையே, கூகுள் ஈசியா வேலையை முடிக்குதுனு" நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை, ஏனென்றால் உங்களது ஜாதகமே கூகுளிடம் இருக்கிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் கூகுள் ஆப்ஸ் பயன்பாடு மக்களோடு பின்னிப் பிணைந்துவிட்டது. ஒருவர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphones) வைத்திருந்தால், அவரால் கூகுள் ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது.

குறிப்பாக, கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 முறையாவது எதையாவது தேடி பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், செய்திகளை படிப்பதற்கோ, வீடியோக்களை பார்ப்பதற்கோ மட்டுமல்லாம், வேலைக்கு அப்ளை செய்வது, வீட்டு பில்களை கட்டுவது, சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது என அனைத்திற்கும் கூகுள் குரோம் முதன்மையானதாக மாறிவிட்டது.
இந்த கூகுள் குரோம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயர்பாக்ஸ் (Firefox), மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge), ஆப்பிள் சஃபாரி (Apple Safari), ஒபேரா (Opera) உள்ளிட்ட பல பெரும் நிறுவனங்களின் பிரவுசர்கள் இருந்தாலும், அதிகப்படியான மக்களின் விருப்பமாக இருப்பது கூகுள் குரோம் மட்டுமே.
இதை நிரூபிக்கும்படி உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் டாப் பிரவுசர்களின் கணக்கெடுப்பில் கூகுள் குரோம் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டேட்கவுண்டர் (Statcounter) என்னும் வெப் அனலிட்டிக்ஸ் நிறுவனம் உலகளவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் டெஸ்க்டாப் பிரவுசர்களின் (Desktop Browser) புள்ளிவிவரங்களை சேகரித்துள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உலகம் முழுவதும் டெஸ்க்டாப் பிரவுசர்கள் பயன்படுத்தும் மக்களில் 66.1 சதவிகிதம் பேர் கூகுள் குரோம் பயனர்களாக உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பாதியை கூட குரோமின் போட்டி பிரவுசர்களான மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge), ஆப்பிள் சஃபாரி (Apple Safari) இரண்டும் நெருங்கவில்லை.
ஆப்பிள் சஃபாரி 11.8 சதவிகித பயன்பாட்டையும், மைக்ரோசாப்ட் எட்ஜ் 11 சதவிகித பயன்பாட்டையும் மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல பயர்பாக்ஸ், ஒபேரா, மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ( Internet Explorer ) ஆகிய மூன்று பிரவுசர்களும் முறையே 5.65, 3.09 மற்றும் 0.55 சதவிகித பயன்பாட்டை மட்டுமே கொண்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரையில், டெஸ்க்டாப் பிரவுசர்கள் பயன்படுத்தும் மக்களில் கூகுள் குரோமை 89.04 சதவிகித மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல பயர்பாக்ஸ் பிரவுசரை 3.64 சதவிகித மக்களும், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரை 3.48 சதவிகித மக்களும் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி பிரவுசர் உள்ளது. ஆனால், 1.01 சதவீத மக்கள் மட்டுமே அதை பயன்படுத்துகின்றனர். கூகுள் குரோமை இவ்வளவு மக்கள் பயன்படுத்தியும், அதுமிகுந்த பாதுகாப்பு நிறைந்த பிரவுசர் என்று சொல்லிவிட முடியாது.
இதுவரை ஆயிரக்கணக்கான முறை குரோமில் இருந்து டேட்டாக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அதில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களும் அடங்கும். சொல்லப்போனால், கூகுள் குரோமை ஒருவர் பயன்படுத்த தொடங்கியது முதல் அவர் என்னவெல்லாம் அதில் தேடினாரோ அந்த மொத்த தகவலும் கூகுள் கைவசம் சென்றுவிடும் என்பதே உண்மை. இதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் தகவல்கள் கிடைக்கும் இடமாக கூகுள் இருப்பதில் ஆச்சரியமில்லை.


Click it and Unblock the Notifications








