Home
News

சீறும் சுந்தர் பிச்சை.. யாரை பார்த்து காப்பி அடிச்சனு சொல்றீங்க.. முட்டுச்சந்தில் இன்னொரு ChatGPT சண்டை!

சாட்ஜிபிடி (ChatGPT) பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை என்று நம்புகிறோம். ஒருவேளை சாட்ஜிபிடி என்றால் என்னவென்றே உங்களுக்கு தெரியாது என்றால், இப்படி ஒரு வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றால் - நீங்கள் நிச்சயம் ஒரு வேற்றுகிரக வாசியாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் கூகுள் (Google) நிறுவனத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் சாட்ஜிபிடியானது உலகளவில் பிரபலமாகி பல வாரங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே "நீயா - நானா" என்கிற போட்டியில் கூகுளும், மைக்ரோசாஃப்ட்டும் கட்டிப்பிடித்து உருளும் நிலையில், சைலன்ட் ஆக இன்னொரு சாட்ஜிபிடி பஞ்சாயத்தும் நடந்துள்ளது.

சீறும் சுந்தர் பிச்சை.. முட்டுச்சந்தில் இன்னொரு ChatGPT சண்டை!

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்திற்கு சொந்தமான ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனம் உருவாக்கிய சாட்ஜிபிடி-ஐ நகலெடுத்து தான் பார்ட் (Bard) எனப்படும் ஏஐ சாட்பாட் (AI Chatbot) பயிற்றுவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதாவது சாட்ஜிபிடி காப்பி அடித்து தான் கூகுள் நிறுவனம் அதன் பார்ட்-ஐ உருவாக்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை மறுக்கும் வண்ணம் கூகுள் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை சார்பாக "ஷேர்ஜிபிடி (ShareGPT) அல்லது சாட்ஜிபிடி-இல் (ChatGPT) இருந்து கிடைக்கும் எந்த டேட்டாவை கொண்டும் கூகுக்கு சொந்தமான ஏஐ சாட்பாட் ஆன பார்ட் பயிற்சி பெறவில்லை" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

"காப்பி அடித்த கதை" எல்லாம் ஒருபக்கம் இருக்க, கூகுளின் பார்ட்-ஆல் சாட்ஜிபிடி-யின் அபார வளர்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை; சரிக்கு சமமான போட்டியை வழங்க முடியவில்லை என்பதும் உண்மையே. குறிப்பாக சமீபத்தில் வெளியான சாட்ஜிபிடி-4 வெர்ஷன், அதற்கு முன் அணுக கிடைத்த சாட்ஜிபிடி 3.5-ஐ விட பல வகையான மேம்படுகளுடன் வந்துள்ளது.

குறிப்பாக, சாட்ஜிபிடி 4 ஆல் டெக்ஸ்ட்டை (Text) மட்டுமின்றி, இமேஜ்களை பார்க்கவும், அவைகளை புரிந்துகொள்ளவும் முடியும் என்பது கூகுளுக்கு மிகப்பெரிய மண்டை குடைச்சலாக இருக்கிறது; இருந்து வருகிறது. போதாக்குறைக்கு சாட்ஜிபிடி 4-இல், ​அனுமதிக்கப்படாத கன்டென்ட் (Disallowed content) தொடர்பான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காதபடி சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் சாட்ஜிபிடி 4-ஐ பெரிதாக குறை சொல்லவும் முடியாது. சாட்ஜிபிடி-யின் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்க்கு எதிராக கூகுள் செய்த ஒரே ஒரு உருப்படியான காரியம் - டாக்ஸ் (Docs), ஜிமெயில் (Gmail), ஷீட்ஸ் (Sheets), மீட் (Meet), ஸ்லைட்ஸ் (Slides), சாட் (Chat) போன்ற சேவைகளில் கூகுள் தனது ஏஐ சூப்பர்பவர்களை (AI Superpowers) கொண்டு வந்ததே ஆகும்.

கூகுளின் புதிய ஏஐ-பவர்டு டூல்களால் (AI Powered Tools) ஜிமெயிலில், கூகுள் ஸ்லைட்ஸில், கூகுள் ஷீட்ஸில், கூகுள் மீட்டில், கூகுள் சாட்டில் மற்றும் கூகுள் டாக்ஸில் பல வகையான அம்சங்களை, திறன்களை, வேலைகளை ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வழியாக மிகவும் எளிமையாக பெற முடியும்; செய்ய முடியும்!

சமீபத்தில் பார்ட்-க்கான ஆரம்ப அணுகலுக்கான (Early Access) முதற்கட்ட பரிசோதனையாக திறப்பதாக கூகுள் அறிவித்திருந்தது. அதனொரு பகுதியாக பார்ட்-க்கான ஆரம்பகால அணுகல் தற்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அணுக கிடைக்கிறது. காலப்போக்கில் இது பல நாடுகளுக்கும், பல வகையான மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூகுள் உறுதியளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Is Not Copying any Data From ChatGPT To Train Its Own AI ChatBot Bard Spokesperson Confirms
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X