இனிமே சாம்சங் போன்களில் Google வராதா? Bing பிரவுசருடன் வரும் புதுபோன்கள்?
சாம்சங் (Samsung) நிறுவனம் கூகுள் (Google) குரோம் பிரவுசருக்கு பதிலாக மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் பிங் (Bing) பிரவுசரை தனது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு சாம்சங் நிறுவனம் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்துவரும் நிலையில், இப்போது புதிய தகவல்கள் கசிந்துள்ளன. அதுகுறித்த விவரம் இதோ.
இந்த 21ஆம் நூற்றாண்டில் கூகுள் பயன்பாடு என்பது மக்களோடு பின்னிப் பிணைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphones) வைத்திருக்கும் யாராலும், கூகுள் ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் கூகுள் குரோம் (Chrome) பிரவுசரை டிபால்டாக (Default) வைத்துள்ளன. அதோபோல கூகுள் தேடல் (Google search) மட்டுமே பெரும்பாலான போன்களில் டிபால்டாக இருக்கிறது.

இதற்கு சாம்சங் நிறுவனம் மட்டும் விதிவிலக்கல்ல. உலகம் முழுவதும் ஆப்பிள் போன்களுக்கு நிகரான மார்க்கெட்டை சாம்சங் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்புள்ளது. இந்த நிறுவனம் ஒரு பிரவுசரை டிபால்டாக வைத்தால், அதை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள்.
இவ்வளவு பெரிய யூசர் பட்டாளத்தை கொண்டுள்ள சாம்சங் நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது பிரவுசர்களை டிபால்டாக பயன்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடையே மைக்ரோசாப்ட் பிங் பிரவுசர் ஏஐ (AI) தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அதிரடி மாற்றங்களும் அதில் கொண்டுவரப்பட்டன.
அந்த நேரத்தில், சாம்சங் நிறுவனமும், தங்களது ஸ்மார்ட்போன்களில் கூகுளுக்கு பதிலாக வேறொரு பிரவுசரை டிபால்டாக வைக்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, மைக்ரோசாப்ட் பிங் பிரவுசரே சாம்சங்கின் டிபால்ட் பிரவுசராக வரப்போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சாம்சங் நிறுவனம் மறுப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எந்த பதிலையும் அந்த நிறுவனம் அளிக்கவில்லை.
ஒருவேளை சாம்சங் நிறுவனம் பிங் பிரவுசரை பயன்படுத்தினால், கூகுள் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சாம்சங் நிறுவனம் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில், சாம்சங் நிறுவனம் பிரவுசரை மாற்றும் பரிசீலனையை கைவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களில் கூகுளுக்கு பதிலாக பிங் பிரவுசரை பயன்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. கூகுள் 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், உடனேயே வேறு பிரவுசருக்கு மக்களை மாற்ற முயற்சிப்பது எளிதான காரியமல்ல.
இதுபோன்ற நிலைமைகளை சரி செய்யவே கூகுள் பிரவுசரானது, அதன் போட்டி பிரவுசர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில்கூட ஏஐ தொழில்நுட்பத்துடன் கூகுள் தேடல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் கூகுளில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் உடனான போட்டி குறித்து பேசுகையில், கூகுள் நிறுவனத்தின் புதுப்புது முயற்சிகள் மீது எனக்கு அபிமானம் உண்டு. அதேபோல சுந்தர் பிச்சை மற்றும் அவரது குழு மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு இணையாக நாங்கள் பிங் பிரவுசரை மேம்படுத்தி உள்ளோம். மக்களிடம் அதை கொண்டு சேர்ந்தால், அவர்களும் அதை புரிந்துகொள்வார்கள்.
அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதன்பின் மார்ச் மாதம் சாம்சங் நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்போன்களில் கூகுளுக்கு பதிலாக பிங் பிரவுசரை பயன்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








