100 படுக்கையோடு ஹாஸ்பிட்டல்,ரூ.500 கோடி நிதி,கூடுதல் டேட்டா,இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே-அம்பானி அதிரடி

|

100 படுக்கையோடு ஹாஸ்பிட்டல், ரூ.500 கோடி நிதி, கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ரிலையன்ஸ் சார்பில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகிறது

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகிறது

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி

பொது மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி செய்யும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக பிஎம் கேர் என்ற தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிஎம் கேர் கணக்குகளில் நிதியுதவி

பிஎம் கேர் கணக்குகளில் நிதியுதவி

பிரமதரின் கோரிக்கையை அடுத்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பிஎம் கேர் கணக்கு தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றன. அதன்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ. 500 கோடி கொரோனா தடுப்பு நிதியாக அளிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎம் கேருக்கு ரூ. 500 கோடி

பிஎம் கேருக்கு ரூ. 500 கோடி

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், பிஎம் கேருக்கும் ரூ. 500 கோடியும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா ரூ.5 கோடியும் கொரோனா நிதியாக அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 லட்சம் இலவச உணவுகள்

சுமார் 50 லட்சம் இலவச உணவுகள்

அதேபோல் நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு சுமார் 50 லட்சம் இலவச உணவுகள் வழங்கப்பட இருப்பதாகவும். குறிப்பாக இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும்படியாக 100 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனைகள் உருவாக்கப்படும் எனவும் அதுவும் இரண்டே வாரங்களில் தயார் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு கவச உடை

ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு கவச உடை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார பணியாளர்களுக்கென 1 லட்சம் மாஸ்குகள் தினசரி வழங்கப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கு என பாதுகாப்பு கவச உடை ஆயிரக்கணக்கில் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரச சேவை வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருட்கள்

அவரச சேவை வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருட்கள்

அதுமட்டுமின்றி வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பிற தேவைக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு என ஜியோ மூலம் அதிக டேட்டா வழங்கப்பட்டு வருவதாகவும், ஆம்புலன்ஸ் போன்ற அவரச சேவை வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

40 கோடி பேர் பயனடைவர்

40 கோடி பேர் பயனடைவர்

ரிலையன்ஸ்-ன் இந்த செயல்பாட்டின் மூலம் 40 கோடி பேர் பயனடைவர் என்று கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ரீடைல் வழியாக தினமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வீடு தேடி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance industries contributes rs 500 crore to pm cares and more for reason of corona issue

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X