தேதி அறிவிச்சாச்சு, கழுகு பார்வையில் Reliance: இது நடந்தா.. இனி கையில் பிடிக்க முடியாது!

|

ரிலையன்ஸ் நிறுவனம் 45-வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜியோ போன் 5ஜி, O2C பிஸ்னஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க் ரோல்அவுட் திட்டத்தை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சேவை குறித்த மெகா அறிவிப்பு

5ஜி சேவை குறித்த மெகா அறிவிப்பு

கடந்த ஆண்டு 44-வது ஏஜிஎம் இல் ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகத்துடன் சோலார் மற்றும் புதிய எரிசக்தி வணிகம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது.

அதேபோல் 5ஜி நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம் மெகா ஏலத்தை கருத்தில் கொண்டு இந்தாண்டு ஏஜிஎம் நிகழ்வில் 5ஜி சேவை குறித்த மெகா அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகளும் வெளியாகலாம்

நடக்க இருக்கும் 45வது ரிலையன்ஸ் ஏஜிஎம் இல் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் oil-to-chemical (O2C) குறித்த மேம்பாட்டு அறிவிப்புள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ தளத்தை IPO க்கு கொண்டு வரலாம் என்றும் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி, ஜியோ போன்கள்?

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி, ஜியோ போன்கள்?

ரிலையன்ஸ் தனது 45-வது ஏஜிஎம் மாநாட்டை ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் எனவும் குறைந்தபட்சம் அது தொடர்பான அறிவிப்பையாவது வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மலிவு விலை 5ஜி போனும் அறிமுகம் செய்யப்படும் என கணிக்கப்படுகிறது.

செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை

செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை

ஜியோ ரூ.88,078 கோடி செலவழித்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் என மொத்தம் 24.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை பெற்றிருக்கிறது.

மறுபுறம் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் அடுக்கு-1 நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் என மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.

செப்டம்பருக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் காரணத்தால், 5ஜி சேவை குறித்த அறிவிப்பு வெளியாகும் என பெருமளவு நம்பப்படுகிறது.

4ஜி ஆதரவுடன் கூடிய ஜியோ போன் நெக்ஸ்ட்

4ஜி ஆதரவுடன் கூடிய ஜியோ போன் நெக்ஸ்ட்

கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கூட்டத்தில் 4ஜி ஆதரவுடன் கூடிய ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற முதல் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன்படி, இந்த ஆண்டு நிகழ்வில் ஜியோ தனது முதல் 5ஜி போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 2 ஜிபி ரேம் வேரியண்ட்

4 ஜிபி ரேம் மற்றும் 2 ஜிபி ரேம் வேரியண்ட்

ஜியோ 5ஜி போன் குறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம். ஜியோ 5ஜி போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் இதில் 2 ஜிபி ரேம் வேரியண்ட் இடம்பெறும் எனவும் கணிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அடிப்படையாகவே இருக்கும் என வெளியாகும் தகவல் தெரிவிக்கிறது.

பிரத்யேக ஓஎஸ் மூலம் இயக்கப்படும்

பிரத்யேக ஓஎஸ் மூலம் இயக்கப்படும்

இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரதான கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி ஷூட்டர் உள்ளிட்டை இடம்பெறும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த ஜியோ 5ஜி போன் ஆனது கூகுள் உடன் இணைந்து ஜியோவால் உருவாக்கப்பட்ட பிரகதி ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது.

ஜியோ 5ஜி போன் விலை என்ன?

ஜியோ 5ஜி போன் விலை என்ன?

ஜியோ 5ஜி போன் ஆனது ரூ.12,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விலையில் அறிமுகமாகும் பட்சத்தில் மிகவும் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து முதல் இந்திய பிராண்ட் என்ற பெருமையை ஜியோ பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ 5ஜி போன் 45-வது பொது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டாலும், இதன் அறிமுகம் தீபாவளி தினத்தன்று இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ தான் நாட்டில் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில், இந்த அனைத்து அறிவிப்பும் வெளியாகும் பட்சத்தில், ஜியோவின் வளர்ச்சி என்பது அதீத வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக பிற போட்டி நிறுவனங்கள் ரிலையன்ஸ் இன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது, எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Best Mobiles in India

English summary
Reliance AGM 2022 Date Announced: Jio 5G, jiophone 5G and More?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X