எலான்மஸ்க், பெசோஸ், பில்கேட்ஸ் என எல்லாரையும் ஓவர்டேக் செய்த இந்திய பணக்காரர் அதானி: அம்பானி நிலை இதுதான்?

|

அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க், அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் உள்ளிட்டோரை விட அதிக பணம் சம்பாதித்திருக்கிறார். இந்த தகவல் முழுவதும் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசியாவின் இரண்டு பணக்காரர்கள்

ஆசியாவின் இரண்டு பணக்காரர்கள்

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் என்பது உலகம் முழுவதும் உள்ள 500 பணக்காரர்களின் தினசரி ஏற்ற தாழ்குளை கண்காணிக்கும் தளமாகும். இந்த தகவல் முழுவதும் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது. கௌதம் அதானி 21.1 பில்லியன் டாலர் ஈட்ட முடிந்த அதே நேரத்தில் சக இந்திய வணிக அதிபரான முகேஷ் அம்பானி 8.24 பில்லியன் டாலர் மட்டுமே ஈட்டினார். அம்பானி மற்றும் அதானி ஆகியோர் ஆசியாவின் இரண்டு பணக்காரர்கள் ஆவார்கள்.

பட்டியலில் உள்ள டாப் 10 நபர்கள்

பட்டியலில் உள்ள டாப் 10 நபர்கள்

பட்டியலில் உள்ள டாப் 10 பேரில் இரண்டு பேரைத் தவிர பிற அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. டாப் 10 பணக்காரர்களில் அமெரிக்காவை சேர்ந்த எட்டு பேரைத் தவிர இருக்கும் இரண்டு பேர்கள் குறித்து பார்க்கையில், பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அதேபோல் இந்தியாவின் முகேஷ் அம்பானி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானி 98.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 2022 ஆம் ஆண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27% அதிகரித்துள்ளது. இருப்பினும் ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைத் தாண்டி இருக்கிறது.

அதானியின் நிகர சொத்து மதிப்பு விவரம்

அதானியின் நிகர சொத்து மதிப்பு விவரம்

அதேபோல் ஃபோர்ப்ஸ் பட்டியலின் தகவல்படி, அவர்களது சொத்துக்களுக்கு இடையேயான வித்தியாசம் 300 மில்லியன் டாலர்களாக மட்டுமே குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு 101.8 பில்லியன் டாலராக இருக்கிறது. அதேபோல் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 100.5 பில்லியன் டாலராக இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள்

ப்ளூம்பெர்க் குறியீட்டின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், 271 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 1.14 பில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார். அதேபோல் இந்த பட்டியலில் ஜெஃப் பெசோஸ் எலான் மஸ்கை விட இந்த ஆண்டு 4.30 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறார். அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 4.48 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெர்கஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட்டின் நிகர மதிப்பு 128 பில்லியன் டாலர் ஆக இருக்கிறது. இவர் நடப்பு காலாண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 18.7 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளார்.

பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் விவரங்கள்

பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் விவரங்கள்

இந்த பட்டியலில் உள்ள பிற இந்தியர்களின் விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்தப் பட்டியலில் அசிம் பிரேம்ஜி 34.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 36-வது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து ஷிவ் நாடார் 28.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 46-வது இடத்தையும், ராதாகிஷன் தமானி 20.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 75-வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் லட்சுமி மிட்டல் 20.2 பில்லியன் நிகர மதிப்புடன் 78-வது இடத்தில் இருக்கிறார்.

Best Mobiles in India

English summary
India Billionaire Gautam Adani Made Money More than Tesla Elon Musk, Amazon Jeff Bezos, Bill Gates and Warren Buffett

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X