ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!

|

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இரண்டு அரிய ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea ஆகும்.

5 நாட்கள் பயணம்

5 நாட்கள் பயணம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்திருந்தாலும், வெளியான ஆதாரங்கள் இரண்டு மரங்களின் விலையையும் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆலிவ் மரங்கள்

இரண்டு ஆலிவ் மரங்கள்

வெளியான ஆதாரங்களின் படி இரண்டு ஆலிவ் மரங்களும் போக்குவரத்து செலவு உட்பட சுமார் 85 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் உள்ள கௌதமி நர்சரியின் உரிமையாளர் மார்கனி வீரபாபு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ஆர்டர் கிடைத்ததாக குறிப்பிட்டார்.

புதிய பங்களாவை அலங்கரிக்க ஆலிவ் மரங்கள்

மேலும் அம்பானிக்கு தங்களை பரிந்துரைத்தது ஒரு கட்டிடக் கலைஞர் எனவும் கடந்த வாரம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்டரை பதிவு செய்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து மரங்கள் தேவை மற்றும் ஆர்டர் குறித்து உறுதிப்படுத்தப்பட்டது எனவும் அம்பானியின் மகன் தங்களுடைய புதிய பங்களாவை அலங்கரிக்க ஆலிவ் மரங்களை தேர்ந்தெடுத்தாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2 டன் எடை

மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 2 டன் எடை கொண்டவையாகும், வேர்கள் கவனமாக மணல் கொண்டு மூடப்பட்டு பயணத்திற்கு ஏற்ப மூடி பாதுகாக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட டிரக்கில் மரங்களை ஏற்றுவதற்கு 25 பேர் கொண்ட குழு மற்றும் ஹைட்ராலிக் கிரேன்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மரங்களின் சுமை மற்றும் உடையக்கூடிய தன்மை காரணமாக டிரக் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனவும் குஜராத் ஜாம்நகரை அடைய சுமார் 5 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முழு சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்க முடிவு

முழு சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்க முடிவு

அம்பானி குடும்பத்தினர் முழு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகவும் இதற்கு என பல இனங்களை சேரந்த அரிய மரங்களை சேகரித்து வருவதாகவும் கௌதமி நர்சரி உரிமையாளர் தனியார் செய்தித்தளத்திற்கு தெரிவித்துள்ளார். ஆலிவ் மரங்கள் புனிதமாக கருதப்படுகிறது எனவும் இது ஆயுட்காலம் நீண்டது எனவும் இந்த அளவு மற்றும் அமைப்பு கொண்ட மரம் கிடைப்பது அரிது எனவும் கௌதமி நர்சரி வீரபாபு தெரிவித்தார்.

ரூ.84 லட்சம் வரை என தகவல்

ரூ.84 லட்சம் வரை என தகவல்

ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு மரங்களும் டன் கணக்கில் எடை கொண்டவையாகும். இந்த மரங்களின் பிறப்பிடம் ஸ்பெயின் ஆகும். இந்த மரங்களானது அம்பானி வீட்டை அலங்கரிக்க கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இரண்டு மரங்களும் ஆந்திராவில் உள்ள கௌதம் நர்சரியில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு ஆலிவ் மரங்களின் விலை சுமார் ரூ.82 லட்சம் முதல் ரூ.84 லட்சம் வரை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த மரங்கள் இடம்பெயர்வு செலவு மட்டும் ரூ.3 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1000 ஆண்டுகள் வரை ஆயுட் காலம்

1000 ஆண்டுகள் வரை ஆயுட் காலம்

இந்த மரங்கள் 180 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும் இது 1000 ஆண்டுகள் வரை ஆயுட் காலம் கொண்டவையாகும்.

ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் இருந்து குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டு மரங்களும் சுமார் 1000 ஆண்டுகள் வரை ஆயுட் காலம் கொண்டவை ஆகும். இந்த மரங்கள் ஆனது குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் நட்டு வைக்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Two Rare Olive Trees Brings From Andhra to Ambani's Gujarat House: Cost: Rs.85 Lakh, 5 Days travel, Each 2 Tone Weigh

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X