இது லிஸ்ட்லயே இல்லயே: அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா இப்படிதான் இருக்கும்.,சந்தேகமே இல்ல- முகேஷ் அம்பானி கணிப்பு

|

அடுத்த 10 - 20 ஆண்டுகளில் சுமார் 20 முதல் 30 இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவிற்கு பெரிய அளவில் வளர்ந்து இருக்கும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் அளவிற்கு பெரிய அளவில் வளர்ந்து இருக்கும்

ரிலையன்ஸ் அளவிற்கு பெரிய அளவில் வளர்ந்து இருக்கும்

அடுத்த 10 - 20 ஆண்டுகளில் சுமார் 20 முதல் 30 இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவிற்கு பெரிய அளவில் வளர்ந்து இருக்கும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார். சுமார் 20 முதல் 30 என்ர்ஜி, டெக் ஸ்பேஸ் நிறுவனங்கள் 10-20 ஆண்டுகளில் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய அளவில் வளரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளம் தொழில்முனைவோரின் திறன்

இந்தியாவின் இளம் தொழில்முனைவோரின் திறன்

அதிக லட்சியம் மற்றும் திறமையான இந்தியாவின் இளம் தொழில்முனைவோரின் திறன் மீது தனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ஆசிய பொருளாதார உரையாடல் நிகழ்ச்சியில், பசுமை ஆற்றல் அது ஏன் காலத்தின் தேவை, எதிர்கால உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான அட்டவணையில் இந்தியா எவ்வாறு முன்னோடியாக இருக்கும் என்பது குறித்து முகேஷ் அம்பானி பேசினார்.

மத்திய அரசின் உத்தரவாதம் மற்றும் ஆதரவு

மத்திய அரசின் உத்தரவாதம் மற்றும் ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உத்தரவாதம் மற்றும் ஆதரவுடன், போதுமான தொழில்முனைவோர் மற்றும் நிதி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், இந்தியா பசுமை ஆற்றலில் ஆத்மநிர்பர் அதாவது தன்னிறைவு ஆக மட்டுமல்லாமல் பசுமை எரிசக்தியில் முக்கிய ஏற்றமதியாளராகவே இந்தியா மாற முடியும் எனவும் இதில் நமது இளைஞர்களுக்கு பெரும் பங்கு இருக்கும் என தான் நம்புவதாக அம்பானி குறிப்பிட்டார். அதேபோல் எங்கள் இளம் தொழில்முனைவோரின் திறன் மீது தனக்கு அபார நம்பிக்கை உள்ளது எனவும் அவர்கள் மிகவும் லட்சியம் மற்றும் திறமையானவர்கள் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். உச்சிமாநாட்டில் புனே சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கரிடம் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப துறை

ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப துறை

அதேபோல் ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப துறையில் 20 முதல் 30 புதிய இந்திய நிறுவனங்கள் இருக்கும் என அம்பானி கணித்துள்ளார். மேலும் அவை அடுத்த 10-20 ஆண்டுகளில் அவை ரிலையன்ஸ் அளவிற்கு பெரிதாக வளரும் என குறிப்பிட்டார். இதுகுறித்து இந்தியாவின் தனது பார்வையை விளக்கிய அவர், "ரிலையன்ஸ் 1 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 15 வருடங்களும், 10 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 30 வருடங்களும், 100 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 35 வருடங்களும், 200 பில்லியன் டாலர்களைத் தொட 38 வருடங்களும் ஆனது ஆனால் அடுத்த தலைமுறை இந்திய தொழில்முனைவோர்கள் இதை பாதி காலத்தில் சாத்தியமாக்குவார்கள் என்பதில் தனதுக்கு சந்தேகமே இல்லை என குறிப்பிட்டார்.

இந்தியாவின் தொழில்முனைவோர் சமூகம் விரிவடையும்

இந்தியாவின் தொழில்முனைவோர் சமூகம் விரிவடையும்

இந்தியாவின் தொழில்முனைவோர் சமூகம் விரிவடையும் எனவும் இது இந்தியாவை மேலும் சமத்துவ நாடாக மாற்றும் என அம்பானி கூறினார். அதேபோல் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஏற்றுமதி ஆனது 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது இது 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 2030 ஆம் ஆண்டுக்குள் அவை அரை டிரில்லியன் டாலர்களை தாண்டும் என தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

புதிய பசுமை ஆற்றலுக்கான அரசாங்கத்தின் ஆதரவு

புதிய பசுமை ஆற்றலுக்கான அரசாங்கத்தின் ஆதரவு

கடந்த 20 ஆண்டுகளில் ஐடி வல்லரசாக இந்தியா உருவானதாக அறியப்பட்டோம், அதேபோல் அடுத்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஆற்றல் மற்றும் உயிர் அறிவியலில் நாம் வல்லரசாக உருவெடுக்கும் என நம்புவதாக அம்பானி குறிப்பிட்டார். அதேபோல் புதிய பசுமை ஆற்றலுக்கான அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஊக்கவிப்பு குறித்து பேசிய அம்பானி, "கொள்கையைப் பொறுத்த வரையில், இந்திய அரசாங்கம் புதிய ஆற்றலை ஊக்குவிப்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பதாக தான் நம்புகிறேன் எனவும் உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டிற்கு இந்தியாவுக்கு அதீத வாய்ப்புகள் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
20 to 30 Indian Companies will grow as big as Reliance in Next 10-20 Years: Reliance Mukesh Ambani Predicted

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X