5ஜி மட்டுமில்ல பாஸ்: Reliance AGM 2022 இல் வெளியான 2 முக்கிய அறிவிப்பு!

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிலவகை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதில் பிரதான ஒன்று 5ஜி அறிமுக தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.

இந்தியாவில் 5ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயத்தில் மற்றொரு இரண்டு முக்கிய அறிவிப்புகளும் வெளியானது.

ஜியோ ஏர்ஃபைபர் மற்றம் ஜியோ கிளவுட் பிசி

ஜியோ ஏர்ஃபைபர் மற்றம் ஜியோ கிளவுட் பிசி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 45-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) இல் ஜியோ ஏர்ஃபைபர் மற்றம் ஜியோ கிளவுட் பிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோ ஏர்ஃபைபர் பயனர்கள் ஜிகாபிட் வேக இணையத்தை கம்பிகள் இல்லாமல் அணுக முடியும். அதேபோல் ஜியோ கிளவுட் பிசி என்பது மெய்நிகர் பிசி ஆகும். இது எந்த வன்பொருள் தேவையுமின்றி நேரடியாக கிளவுட்டில் ஹோஸ்ட் செய்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ தனது ஐந்தாம் தலைமுறை மொபைல் நெட்வொர்க் சேவையை ஜியோ ட்ரூ 5ஜி என அறிமுகம் செய்தது. இந்த சேவையின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ கிளவுட் இயங்கும்.

அதிவேக வயர்லெஸ் நெட்வொர்க்

அதிவேக வயர்லெஸ் நெட்வொர்க்

RIL இன் 45வது AGM இல் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, புதிய ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ கிளவுட் பிசியை அறிவித்தார். இதில் JioAirFiber ஆனது அதிவேக வயர்லெஸ் நெட்வொர்க் ஆகும்.

JioAirFiber பயனர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வயர்லெஸ் நெட்வொர்க்குள் மூலம் ஜிகாபிட் வேக இணையத்தை வழங்குகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ஹோம் கேட்வே

ஜியோ ஏர்ஃபைபர் ஹோம் கேட்வே

ஜியோ ஏர்ஃபைபர் ஹோம் கேட்வே என்பது வயர்லெஸ் சிங்கிள் சாதனமாகும், இது பவர் சோர்ஸில் செருகப்பட்டு பயன்படுத்தப்படும் வைஃபை ஹாட்ஸ்பாட் போன்ற சாதனம். ஜியோவின் True 5G சேவையை பயன்படுத்தி அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும்.

ஜியோ ட்ரூ 5ஜி இணைப்பு

ஜியோ ட்ரூ 5ஜி இணைப்பு

ஜியோ கிளவுட் பிசி என்பது ஜியோ ட்ரூ 5ஜி இணைப்பு மூலம் கிளவுட்டில் ஹோஸ்ட் செய்யப்படும் மெய்நிகர் பிசி ஆகும். அதாவது பெரிய வன்பொருள் (Hardware) தேவைகள் இல்லாமல் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்களை விரச்சுவல் பிசி ஆக மாற்றலாம்.

அதாவது பெரிய வன்பொருட்கள் எதுவும் பயன்படுத்தாமல் பல கணினிகளை ஒன்றிணைக்க இதை பயன்படுத்தலாம்.

அதேபோல் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதை பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ப மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

அக்டோபர் மாதத்திற்குள் அறிமுகம்

அக்டோபர் மாதத்திற்குள் அறிமுகம்

இதில் ஒரு பிரதான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் எப்போது வரும்., எப்போது வரும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி அக்டோபர் மாதத்திற்குள் சில நிபந்தனைகளோடு வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Reliance Jio 5ஜி சேவைகள்

Reliance Jio 5ஜி சேவைகள்

Reliance Jio 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தீபாவளித்தன்று வெளியிடப்படும் என டெலிகாம் ஆபரேட்டர் அறிவித்துள்ளது. ஜியோ இந்தியாவிற்கான 5ஜி சேவையை செயல்படுத்த Qualcomm உடன் இணைந்திருக்கிறது.

நாடு முழுவதும் எப்போது அறிமுகம்?

நாடு முழுவதும் எப்போது அறிமுகம்?

நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ., தீபாவளிக்குள் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 5ஜி இணைப்பை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிறுவனம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. அதேபோல் ரிலையனஸ் ஜியோவின் 5ஜி சேவை நாடு முழுவதும் டிசம்பர் 2023க்குள் அறிமுகம் செய்யப்படும் எனபது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக வேகமான சேவை

உலகின் மிக வேகமான சேவை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 45வது ஏஜிஎம் இல் இந்தியாவிற்கான 5ஜி சேவை வெளியிடுவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

வருகிற தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜியை அறிமுகப்படுத்தும் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் தாலுகாவிலும் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும் என்பதை அம்பானி உறுதிப்படுத்தினார்.

நிறுவனத்தின் 5ஜி வெளியீட்டுத் திட்டம் உலகிலேயே மிக வேகமானதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Reliance Jio AirFiber, Jio Cloud PC announced: what's the use?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X