செக் மேட்.. அம்பானினா சும்மாவா? இந்தியாவில் Jio Payment சவுண்ட்பாக்ஸ் அறிமுகம்.. மாறப்போகும் UPI கட்டண முறை..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் விரைவில் அதன் சொந்த ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்ஸ் (Jio Payment Soundbox) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான பணிகளை, நிறுவனம் இப்போது விரைந்து செய்து வருகிறது. இது பற்றிய கூடுதல் விபரம் இதோ.
Jio Payment Soundbox: கூகுள் பே (Google Pay), PhonePe (போன்பே), பேட்டியம் (Paytm), வாட்ஸ்அப் பேமெண்ட் (WhatsApp) போன்ற டிஜிட்டல் பேமெண்ட் சேவை வரிசையில் ஜியோ பேமெண்ட் சேவையும் விரைவில் சேரவுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் புதிய ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்ஸ் சேவையை அறிமுகம் செய்து, பேட்டியம் மற்றும் போன்பே நிறுவனங்களை பின்னுக்கு தள்ள திட்டமிட்டுள்ளது.

ஜியோ பேமெண்ட் இந்தியா: ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்ஸ் சேவையா அப்படி என்றால் என்ன? இது எப்படி இந்தியாவில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவிருக்கிறது என்பது பற்றி இப்போது பார்க்கலாம். ஜியோ பேமெண்ட் என்பது எல்லாருக்கும் புரியும் விதத்தில் UPI கட்டண முறையை குறிக்கிறது. சவுண்ட்பாக்ஸ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது தான் இப்போது எல்லோருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும்.
ஜியோ சவுண்ட்பாக்ஸ் என்றால் என்ன? சவுண்ட்பாக்ஸ் என்பது வேறொன்றும் இல்லை. நீங்கள் ஒரு கடையில் அல்லது கடைக்காரரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI பேமெண்ட் கட்டணத்தை செலுத்தும் பொழுது, தொகை பெறப்பட்டது என்று ஒலிக்கும் அந்த சிறிய டப்பா தான் சவுண்ட்பாக்ஸ் ஆகும். இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஜியோ பேமெண்ட் ஆப்ஸிற்கு ஏற்ற சவுண்ட்பாக்ஸ் தயாரிப்பை வேகப்படுத்தியுள்ளது.
சவுண்ட்பாக்ஸ் வைத்து அம்பானி என்ன திட்டமிடுகிறார்? ரிலையன்ஸ் ஜியோவின் பேமெண்ட்ஸ் சவுண்ட்பாக்ஸ், அதன் தற்போதைய ஜியோ பே ஆப்ஸின் விரிவாக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சவுண்ட்பாக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் சந்தை இருப்பை விரிவுபடுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. சவுண்ட்பாக்ஸ் தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் சில்லறை விற்பனை இடங்களில் தொடங்கியுள்ளன.

எப்போது இது பயன்பாட்டிற்கு வரும்? ரிலையன்ஸ் ஜியோ தனது ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் அடுத்த எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள் சவுண்ட்பாக்ஸின் விரிவான பைலட் அறிமுகத்தை திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ போன்ற டையர்-2 நகரங்களில் சோதனை செய்யப்படவுள்ளது. வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, இது மற்ற நகர்ப்புற சந்தைகளில் ஊடுருவும் என்று கூறப்பட்டுள்ளது.
வாரி வழங்கும் அம்பானி.. யாருக்கு தெரியுமா? இந்த புதிய சவுண்ட்பாக்ஸ்களை குறுகிய காலத்திற்குள் வெகு வேகமாக இந்தியா முழுக்க பரப்ப ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ஆகையால், ஷாப் உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இத்தகைய சூட்சமத்தை கையாள்வது இதுவொன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் கவனத்தை கவர நிறுவனம் எப்போதும் சலுகைகளை வரிவழங்குவது வழக்கமான ஒன்றே.
ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்ஸ் என்ன விலையில் வரும்? இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட் சவுண்ட்பாக்ஸின் விலை பற்றிய விபரங்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. இந்த சவுண்ட்பாக்ஸ்களின் விலை வழங்குநருக்கு வழங்குநர் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, பேடிஎம் அதன் சவுண்ட்பாக்ஸ் சாதனத்தை ரூ. 1 என்ற கட்டணத்துடன் வழங்குகிறது. ஆனால், மாத வாடகையாக ரூ.125 கட்டணத்தை வசூலிக்கிறது.
இந்தியாவில் இனி ஜியோ UPI ராஜ்யம் தான்: இதேபோல், PhonePe ஆனது சந்தையின் வெவ்வேறு பிரிவுகளுக்கு வழங்குவதற்காக மாத வாடகையாக ரூ.49 வசூலிக்கிறது. பாரத்பே இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. அதே நேரத்தில் கூகுள் பே விரைவில் இந்த களத்தில் இறங்கக்கூடும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும், ஜியோ விரைவில் இந்தியாவின் முன்னிலை பேமெண்ட் சேவையாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








