கேப்பில் புகுந்து Amazon பார்த்த வேலை., இந்தியர்களுக்கு அமோக லாபம்! உங்ககிட்ட ஆண்ட்ராய்ட் போன் இருக்கா?

|

Amazon Prime Video மொபைல் பதிப்புக்கான மலிவு விலை சந்தா திட்டத்தை அறிவித்துள்ளது. இதுநாள் வரை இந்த மலிவு விலை அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வளர்ந்து வரும் OTT

வளர்ந்து வரும் OTT

ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும் குறுகிய காலங்களிலேயே ஏதாவது ஒரு ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது.

மலிவு விலை திட்டம்

மலிவு விலை திட்டம்

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு இன் மலிவு விலை திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2021 முதல் இந்த திட்டமானது ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அனைவருக்குமானது விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் தான் நிறுவனத்தின் மலிவு விலை சந்தா திட்டமாகும்.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு விலை என்ன?

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு விலை என்ன?

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு இதுவாகும். மொபைலில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் இதுவாகும். இதன் விலை ஆண்டுக்கு ரூ.599 மட்டுமே என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Amazon Prime அனுபவம்

Amazon Prime அனுபவம்

அமேசான் வெளியிட்ட தகவலின்படி, சந்தாதாரர்கள் ஒரே ஸ்மார்ட்போனில் தான் இந்த அணுகலை பெற முடியும். Amazon Prime சந்தாவுடன் வரும் முழு Prime Video அனுபவத்தைப் போல் இது இருக்காது. பயனர்கள் இந்த திட்டத்தில் பல அணுகலை பெற மாட்டார்கள். அதேபோல் கணினி அல்லது ஸ்மார்ட்டிவிகளில் 4கே தெளிவுத்திறனில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துணைத் தலைவர்

சர்வதேச துணைத் தலைவர்

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மிகவும் ஈடுபாடு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் புதுமைகளே நாட்டில் எங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம். உண்மையில் பிரைம் வீடியோவிற்கான புதுமை மையமாக இந்தியா மாறி வருகிறது என பிரைம் வீடியோவின் சர்வதேச துணைத் தலைவர் கெல்லி டே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியரும் மகிழ வேண்டும்

ஒவ்வொரு இந்தியரும் மகிழ வேண்டும்

அதேபோல் தற்போது வெளியாகியுள்ள பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் என்பது ஒரு முன்முயற்சி. இந்த திட்டம் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பல நாடுகளில் பரவி வருகிறது. ஒவ்வொரு இந்தியரை மகிழ்விக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது எனவும் கெல்லி டே குறிப்பிட்டார்.

கேப்பில் புகுந்த அமேசான்

கேப்பில் புகுந்த அமேசான்

நெட்ஃபிளிக்ஸ் ஒரு பக்கம் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் அமேசான் பிரைம் சைலண்டாக ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மலிவு விலையில் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை நெட்ஃபிளிக்ஸ் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த கேப்பில் தான் அமேசான் புகுந்து ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஸ்கெட்ச் போட்ட நெட்ஃபிளிக்ஸ்.. செயல்படுத்திய அமேசான்

ஸ்கெட்ச் போட்ட நெட்ஃபிளிக்ஸ்.. செயல்படுத்திய அமேசான்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை குறிப்பிட்ட நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம் இந்த திட்டத்தில் நீண்ட நாட்களாகவே வேலை செய்து தற்போது செயல்படுத்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Only Rs.599 for 1 Year: Amazon Prime Video Mobile Edition launched across India: Read More this in Gizbot Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X