இது என்ன தொடர்கதையா?- மீண்டும் வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி: போன் பேசிக் கொண்டிருந்த போது வெடிச்சுருக்கு!

|

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெடித்ததாக கூறப்படும் காரணம் குறித்த தகவலை விரிவாக பார்க்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மீண்டும் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெடிப்பு குறித்து பயனர் ஒருவர் டுவிட்டரில் புகார் செய்திருந்தார். இதுகுறித்து அவர் பகிர்ந்த புகைப்படத்தில் சாதனம் முழுவதுமாக வெடித்து சிதறி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஒன்று வெடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் பயனருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெடிப்பு

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி வெடிப்பு

டுவிட்டர் பயனர் லக்ஷய் வர்மா, அவரது சகோதரர் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தில் அழைப்பில் இருந்தபோது அவரது கைகளில் வெடித்ததாக புகார் அளித்திருந்தார். தொடர்ந்து புதுதில்லியைச் சேர்ந்த பயனர், கன்னாட் பிளேஸில் உள்ள ஒன்பிளஸ் சேவை மையத்திற்கு சென்று எரிந்த போனை சரிசெய்வதற்காக கொடுத்துள்ளார். ஆனால் அந்த மையம் இவரது புகாரை முழுமையாக தீர்க்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து டுவிட்டர் பயனர் தெரிவித்த கருத்தின்படி, இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பயனரை சேமை மையம் அழைத்ததாக கூறப்படுகிறது. டுவிட்டர் பயனர் கடந்தவாரம் வெடிப்புக்குள்ளா ஸ்மார்ட்போனின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் சாதனம் உடைந்த டிஸ்ப்ளே மற்றும் டிஸ்ப்ளே கீழ்பகுதி பிரிந்த நிலையில் காணப்பட்டது.

பயன்பாட்டில் இருந்தபோது வெடித்து சிதறியதாக தகவல்

பயன்பாட்டில் இருந்தபோது வெடித்து சிதறியதாக தகவல்

ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனம் பயன்பாட்டில் இருந்த போது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து லக்ஷய் வர்மா என்ற @lakshayvrm டுவிட்டர் பயனர் அவரது சகோதரர் அழைப்பில் இருந்த போது வெடித்ததாக குறிப்பிட்டார். இந்த வெடிப்பு நிகழ்வால் அவரது சகோதரரின் உள்ளங்கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாக கிஸ்மோ சீனாவில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என ஒருதரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

நீக்கப்பட்ட டுவிட் தகவல்

நீக்கப்பட்ட டுவிட் தகவல்

வர்மா தனது @lakshayvrm என்ற டுவிட்டர் கணக்கில் இதுகுறித்து டுவிட் செய்திருந்தார், ஆனால் அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் வெடிப்பு புகைப்படங்களை டுவிட்டில் இருந்து நீக்கிவிட்டார். ஒன்பிளஸ் சப்போர்ட் டுவிட்டர் பக்கத்தில், லக்ஷய் பதிவுக்கு பதிலளித்துள்ளது. இருப்பினும் லக்ஷய் வர்மா அந்த பதிவை நீக்கிவிட்டதால் ஒன்பிளஸ் அளித்த பதில் அவருக்கானதா என்பது தெரியவில்லை. ஒன்பிளஸ் சாதனம் வெடித்தது என்ற தகவல் இது முதல்முறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை வெடித்ததாக வெளியான தகவல்

கடந்த முறை வெடித்ததாக வெளியான தகவல்

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரின் கவுனில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது புதுடெல்லியில் உள்ள நீதிமன்ற அறை ஒன்றில் புதன்கிழமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பயனர் சம்பவத்தின் விவரங்களை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். ழக்கறிஞர் கவ்ரவ் குலாட்டி தனது அறையில் அமர்ந்திருந்த போது அவர் கவுனின் பாக்கெட்டில் இருந்த வெப்பம் வருவதை உணர்ந்திருக்கிறார். வெப்பம் உடலில் படுவதை உணர்ந்த போது தனது பாக்கெட்டில் இருந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை எடுத்து அதில் இருந்து புகை வருவதை பார்த்ததாக தெரிவித்தார்.

சாதனம் வெடிப்பு குறித்து பகிரப்பட்ட டுவிட்டர் தகவல்

அதன்பின், தான் உடனடியாக கவுனை தூக்கி போட்டதாகவும், பின் தானும் தன் சகாக்களும் ஸ்மார்ட்போனின் அருகில் சென்றபோது, அது வெடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து முழு அறையும் புகையால் நிரம்பியதாக அவர் குறிப்பிட்டார். வெடித்த சாதனத்தை குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்புதான் பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்தார். வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆகஸ்ட் 23, 2021 அன்று வாங்கப்பட்டது. இந்த சாதனம் வெடித்தது செப்டம்பர் 2021 ஆகும். வெடித்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்தார். புதிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தி சில தினங்களே ஆனதாக கூறிய அவர் பழைய தொலைபேசியில் இருந்து தரவை கூட மாற்றவில்லை என குறிப்பிட்டார்.

Source: abplive.com

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G Smartphone Exploded again in India: Report Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X