Just In
- 11 hrs ago
விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!
- 11 hrs ago
ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்!
- 13 hrs ago
அசத்தலான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
- 22 hrs ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
Don't Miss
- News
கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகளை... கைவிட்டு விடாதீர்... அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை..!
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Movies
பேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க!
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Finance
இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் டெலிகாம் துறையில் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்றே கூறலாம், அதன்படி ஏர்டெல், வோடபோன் ஐடியா,பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களை
விட சிறந்த திட்டங்கள் மற்றும் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைவர் அம்பானி அடுத்தடுத்த முக்கிய திட்டங்களை கையில் எடுத்து வருகிறார். ஒருபுறம் டெலிகாம் வாடிக்கையாளர்களை கொண்டு எப்படி ரிலையன்ஸ்-ன் மற்ற துறையின் வர்த்தகத்தை மேம்படுத்துவது, மறுபுறம் டெலிகாம் துறைசார்ந்ததொழில்நுட்பத்தையும்,சேவையையும் எப்படியெல்லாம் மேம்படுத்துவது அதன் மூலம் எப்படி வர்த்தகத்தை ஈர்ப்பது என்பதில் தெளிவாக செயல்படுகிறார்
முகேஷ் அம்பானி.

அதன்படி டெலிகாம் துறை சார்ந்த வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி தற்போது மிகவும் பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
உஷார்: ஆன்லைன் டெலிவரியின் போது நோட்டமிட்ட வீடு: போதையில் திருட வந்து தூங்கிய இன்ஜினியர்- அடுத்து?

அதாவது இந்திய மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்த அதிரடி முடிவு இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் சியோமி,ரியல்மி, விவோ போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக விளங்குகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் சேவை துறையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதைப் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஏற்கனவே தனது பணியைத் துவங்கியுள்ள நிலையில், தற்சமயம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே மலிவு விலையில் பியூச்சர் போன்களைத் தனது ஜியோ டெலிகாம் சேவையுடன் இணைந்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி நிறுவனங்களை அடுத்த 2 வருடத்தில் 20கோடி மலிவு விலை ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.!

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த முதலீட்டு கூட்டணியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஜியோபோனை இந்தியாவிலேயே தயாரித்து அதை ரூ.4000-க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்கள், மலிவு விலை ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை உடன் பேக்கேஜ்-ஆக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 5-ல் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்கள் 7000 ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் என்பதால் பியூச்சர் போன்களைப் பயன்படுத்துவோருக்கும்,விலை குறைவான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோருக்கும் ரிலையன்ஸ்-ன் 4000 ரூபாய் ஸ்மார்ட்போன் அதிக விருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190