100GB கேட்டால்.. 150GB தரும் Jio.. ஓஹோனு 90 நாள் வேலிடிட்டி.. ஆனா டிவிஸ்ட் வைத்த அம்பானி.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள் சிலர் 100GB டேட்டா கிடைத்தால் சூப்பராக இருக்குமே என்று அரசல்புரசலாக கேட்க, இந்த தகவல் அம்பானி காதிற்கு எப்படியோ செல்ல, 100 என்ன 100 இந்தாங்க 150GB-யா வச்சுக்கோங்க என்று அம்பானி புது திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா-கிருஷ்ணா என்ற சிவாஜி கணேசனின் பழைய பாடல் வரிகள் போல, கேட்டதும் கொடுப்பவராக மாறி வருகிறார் அம்பானி. ஜியோ வாடிக்கையாளர்களின் மனதை குளிர்விப்பத்திற்கு அம்பானியும் (Ambani), அவர் ஜியோ (Jio) நிறுவனமும் ஒரு போதும் தவறியதில்லை. இதை மீண்டும் ஒரு முறை அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் நிரூபித்துள்ளது.

ஜியோ வழங்கும் 150ஜிபி டேட்டா நன்மை (150GB data benefit from Jio):
ஜியோ நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி இல்லை, 100 ஜிபி இல்லை, நேரடியாக 150 ஜிபி டேட்டா (150GB data) நன்மையை வழங்கும் புதிய திட்டத்தை அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio prepaid recharge) பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. ஆம் மக்களே, ஒரு முழு சதம் (century) + ஒரு அரைசதம் (Half century) என்று இரண்டையும் ஒரே திட்டத்தில் வழங்கி டபுள் சந்தோஷத்தை வழங்கியுள்ளது.
இந்த புதிய திட்டம் ஹெவி டேட்டா யூசர் (heavy data users) பயனர்களுக்காக ஜியோ அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ திட்டம் ரூ.667 (Jio Rs 667 Plan) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது மக்களே. 100GB கேட்ட வாடிக்கையாளர்களுக்கு 150GB கொடுத்த ஜியோ இந்த திட்டத்தில் ஒரு டிவிஸ்டை வைத்துள்ளது.

ஆம், மக்களே டேட்டா நன்மை மற்றும் வேலிடிட்டி நன்மையை அள்ளிக்கொடுத்த அம்பானி, இதை ஒரு டேட்டா பேக் (Jio data pack) திட்டமாக வழங்கியிருக்கிறார். ஆம், இந்த ஜியோ ரூ 667 திட்டம் டேட்டா ஒன்லி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவோரு டேட்டா பேக் திட்டம் என்பதனால், இந்த திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Voice calls benefit) நன்மை கிடைக்காது.
ஜியோ ரூ 667 திட்டம் (Jio Rs 667 Plan):
அதேபோல், இந்த திட்டம் உங்களுக்கு தினசரி எஸ்எம்எஸ் (daily SMS benefit) மற்றும் இலவச எஸ்எம்எஸ் (free SMS benefits) போன்ற நன்மையையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 150ஜிபி டேட்டா நன்மை மட்டுமே கிடைக்க பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ திட்டம் இப்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
அதிகமாக கேமிங், சமூக வலைத்தளங்கள், திரைப்படம், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைன் சர்ஃபிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. இதேபோன்ற அட்டகாச நன்மையை வழங்கும் டேட்டா திட்டங்களை ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறைந்த விலையுடன் குறைந்த டேட்டாவை வழங்கும் திட்டங்களும் இப்போது கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








