ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
யாருக்கு கொடுத்துவச்சுசோ இல்லையோ, ஜியோ (Jio) பயனர்களுக்கு வகையா கொடுத்து வைத்திருக்கிறது. ரூ.300 விலைக்குள் அட்டகாச நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் திட்டங்களை ஜியோ நிறுவனம் இப்போது வழங்க துவங்கியுள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
தினசரி டேட்டா நன்மை வேண்டும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை வேண்டும். தினசரி எஸ்எம்எஸ் நன்மை வேண்டும். ஆனால் விலை ரூ. 300-க்குள் தான் இருக்க வேண்டும். அதுவும் கட்டாயம் குறைந்தது ஒரு மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாக தான் இருக்க வேண்டும் என்று அதிக ஏதிர்பார்பை கொண்டவர்களை கருத்தில் கொண்டு ஜியோ இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.

1. ஜியோ ரூ. 209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 Prepaid Plan):
இந்த ரீசார்ஜ் திட்டம் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் போல் இல்லாமல், 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவின் மற்ற திட்டங்கள் 20 நாள் மற்றும் 24 நாள் வேலிடிட்டி உடன் வந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது. இதுவும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds போன்ற இலவச நன்மைகளுடன் வருகிறது.
2. ஜியோ ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 299 Prepaid Plan):
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வெறும் 299 ரூபாய் விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதல் இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

3. ஜியோ ரூ. 296 திட்டம் (Jio Rs 296 Prepaid Plan):
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி டேட்டாவை வழங்காது ஆனால், ஒட்டுமொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ஒரு முழு மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியாய் கொண்டுள்ளது. இந்த திட்டம் 30 நாள் நீடிக்கும் முழுமையான 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.
இந்த 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் ரூ. 300 விலைக்குள் வருகின்றன. இந்த திட்டங்களை தான் இந்திய மக்கள் அதிகமாக விரும்பி ரீசார்ஜ் செய்கிறார்கள். குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் மக்களாக இருந்தாலும், அவர்களுக்கும் அட்டகாசமான நன்மைகளை வழங்க வேண்டுமென்று தான் அம்பானிக்கு சொந்தமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் எந்த திட்டம் உங்களுக்கானது என்பதை காரணத்துடன் கமெண்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








