அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் அற்புதமான சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் சில ஓடிடி ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஜியோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 398 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி டேட்டா வழங்கப்படும்.
அதேபோல் 12 ஒடிடி சேவைகளுக்கான சந்தாவை வழங்குகிறது இந்த ரூ.398 திட்டம். அதன்படி சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் உள்ளிட்ட ஆப்ஸ்களை நாம் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். இந்த ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 1198 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் 18ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 186ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) , கன்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால்(Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) ஆகிய தளங்களின் சந்தா வழங்குிறது ரூ.1198 திட்டம்.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகளும் இந்த அட்டகாசமான ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 4498 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 78ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 808ஜிபி டேட்டா கிடைக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) உள்ளிட்ட ஓடிடி சந்தா ரூ.4498 திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு எந்த கவலையும் இருக்காது.


Click it and Unblock the Notifications