அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.155 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
28 நாட்கள் வேலிடிட்டிக்காக.. ரூ.299, ரூ.398 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்வது கட்டுப்பாடு ஆகவில்லை என்று கூறுபவர்களுக்காகவே.. ஒரு ஜியோ திட்டம் உள்ளது. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? அதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
எஸ்எம்எஸ் (SMS), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data), ஜியோ சினிமா (Jio Cinema) என கிட்டத்தட்ட ஜியோவின் கீழ் கிடைக்கும் எல்லா வகையான சேவைகளையும் மலிவான விலைக்கு வழங்குவது ரூ.155 திட்டம் தான். இது ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) தொகுப்பில் உள்ள வேல்யூ என்கிற பிரிவின் (Value Section) கீழ் கிடைக்கும் 3 திட்டங்களில் ஒன்றாகும்.

ரூ.155-ன் கீழ் நன்மைகள் கிடைக்கும்? ஜியோவின் ரூ.155 திட்டம் மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள், மொத்தம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகளும், ஜியோ சினிமா, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ க்ளவுட் (Jo Cloud) உள்ளிட்ட ஜியோ ஆப்களின் இலவச சந்தாக்களும் கிடைக்கும்,
அதாவது உங்களுக்கு அதிக அளவிலான டேட்டா பயன்பாடு தேவைப்படாது என்றால், அதே சமயம் ஓடிபி (OTP) போன்ற முக்கியமான எஸ்எம்எஸ்களுக்கான தேவைகள் மட்டுமே உள்ளதென்றால்.. ஜியோவின் ரூ.155 திட்டத்தை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இதை வருடம் முழுக்க ரீசார்ஜ் செய்தால் கூட வெறும் ரூ.1900 தான் செலவாகும்.

ஜியோ வேல்யூ பிரிவின் கீழ் உள்ள மற்ற 2 திட்டங்களை பொறுத்தவரை, ஒன்றின் விலை ரூ.395 ஆகும். நம்பினால் நம்புங்கள் இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி (84 Days Validity) உடன் வருகிறது. மற்றொன்றின் விலை ரூ.1559 ஆகும். இது 1 வருடம் அல்லது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (1 Year or 365 Days Validity) வாங்குகிறது.
ரூ.395 திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் மொத்தம் 1000 எஸ்எம்எஸ்கள், மொத்தம் 6ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகளையும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்களின் இலவச சந்தாக்களையும் வழங்கும்.

ரூ.1559 திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டம் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள், மொத்தம் 24ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகளையும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்களின் இலவச சந்தாக்களையும் வழங்கும்.
இதுதவிர்த்து ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகிய இரண்டுமே ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்கிற இலவச சலுகையையும் (Jio Unlimited 5G Data Offer) வழங்கும். அதாவது உங்கள் பகுதியில் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி சேவை அறிமுகமாகி இருந்தால்.. உங்களிடம் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால்.. இந்த சலுகைக்கு நீங்கள் தகுதியானவர் ஆவீர்கள்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ உட்பட, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்துமே, 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் முடிந்ததும் தத்தம் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவிக்க உள்ளன. ஆக முன்கூட்டியே ஒரு நல்ல 1 ஆண்டு திட்டமாக பார்த்து ரீசார்ஜ் செய்து வைத்துகொள்வது நல்லது. அப்போதுதான் இன்னும் சில வாரங்களில் வரும் விலை உயர்வில் இருந்து அடுத்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உங்களால் தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








