ஆரம்பிச்சிட்டாரு.. FREE டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு ஜாக்பாட்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தாவும் வருது!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் வழங்கும் 4 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இலவச டேட்டா (Free Data) சலுகை கொடுக்கப்படுகிறது. முன்பு போல டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், இப்போது ஓடிடி சலுகையும் கிடைப்பதால், கஸ்டமர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல இருக்கிறது.
ஜியோ ரூ 398 திட்ட விவரங்கள் (Jio Rs 398 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக 12 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), பிளானட் மராத்தி (Planet Marathi), எபிக்ஆன் (Epic On), ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகை போக கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை ஜியோ ஆப் மூலம் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதால், கூடுதல் டேட்டாவோடு மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
இதுபோக முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் யூசேஜ் டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த திட்டத்தில் 14 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமயம், டிஸ்கவரி பிளஸ் உள்ளிட்ட ஓடிடிகளை பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 18 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. ஓடிடிகளை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த திட்டத்தில் 78 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆகவே, 800 ஜிபிக்கு மேல் சலுகை கிடைக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லயன்ஸ்கேட்பிளே, டிஸ்கவரி பிளஸ் உள்ளிட்ட 14 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். அனைத்துக்கும் 1 வருட சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வருகிறது. அதேபோல மேற்கூறிய 4 திட்டங்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை பொருந்தும்.


Click it and Unblock the Notifications








