Home
News

அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?

தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்கி.. அடுத்த 11 மாத்திற்கு.. இன்னும் சொல்லப்போனால் 2025 மார்ச் மாதம் வரையிலாக.. வேறு எந்த ரீசார்ஜையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் ஜியோ (Jio) திட்டம் பற்றி தெரியுமா? தெரியாதென்றால்.. தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

ஏனென்றால்? 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் முடிந்ததும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் (ஏர்டெல், ஜியோ வோடபோன் ஐடியா ஆகிய அனைத்துமே) ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவிக்க உள்ளன. ஆக முன்கூட்டியே இந்த 11 மாத திட்டத்தை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டால்.. இன்னும் சில வாரங்களில் வரும் விலை உயர்வில் இருந்து அடுத்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தப்பித்து கொள்ளலாம்.

2025 வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா!

அதென்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது ஜியோவின் ப்ரீபெய்ட் தொகுப்பின் கீழ் கிடைக்கும் ரூ.2545 திட்டத்தை பற்றித்தான். இந்த திட்டத்தின் வேலிடிட்டி சரியாக 336 நாட்கள் ஆகும். அதாவது இது 11 மாதங்கள் செல்லுபடியாகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 504ஜிபி டேட்டா கிடைக்கும்.

வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டேட்டாவை தவிர்த்து இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற வழக்கமான நன்மைகளும்.. கூடவே ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் கிடைக்கும்.

2025 வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா!

2024 தேர்தலுக்கு பின் வரும் விலை உயர்வானது எத்தனை சதவிகிதமாக இருக்கும்? டெலிகாம் ஆய்வாளர் (Telecom Analyst) ஒருவர் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் கட்டணங்களை 15-17% அதிகரிக்கும். இந்தியாவில், ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை முதலில் அதிகரிக்கும் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம்.. கடந்த 2021-ல் ரீசார்ஜ் திட்டங்களின் மீது 20-25% விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பின்னர் வரும் மிகப்பெரிய விலை உயர்வாக இது இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே 2024 மக்களவை தேர்தல் எப்போது முடியும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது முடிந்த வேகத்தில் ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிக்கடப்படலாம்.

2025 வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா!

இந்த விலை உயர்விற்கு பின்னர் என்னென்ன திட்டங்கள் தோராயமாக எவ்வளவு விலை அதிகரிக்கும்? 17% என்கிற விலை உயர்வு, நடைமுறைக்கு வரும் பட்சத்தில்.. தற்போது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலையை ரூ.50 அதிகரித்து ரூ.349 ஆக மாற்றும். இதேபோல தற்போது ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலையை ரூ.67 அதிகரித்து ரூ.466 ஆக மாற்றும்.

5ஜி சேவையை இன்னும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கூட விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கும் கூட ரீசார்ஜ் கட்டண உயர்வு என்பது மிகவும் தேவையான ஒரு நடவடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இந்நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU - Average revenue per user) மற்றும் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

5ஜி-ஐ அறிமுகம் செய்து விட்டாலும் கூட.. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டாலும் கூட.. இவ்விரு நிறுவனங்களுமே தத்தம் 5ஜி சேவைகளை வைத்து இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கவே இல்லை. தற்போது வரை 5ஜி டேட்டா இலவசமாகவே கிடைக்கிறது. இந்த நிலைமை 2024 தேர்தல் முடிந்த பின்னர் மாறலாம்.

Best Mobiles in India

English summary
Jio Price Hike Coming Soon Recharge This 11 Month Validity Plan To escape From Next Tariff Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X