ரம்ஜான் நோன்பு: ஆபாச தளங்களை முடக்கிய இந்தோனேஷிய அரசு!

Posted By: Karthikeyan
ரம்ஜான் நோன்பு: ஆபாச தளங்களை முடக்கிய இந்தோனேஷிய அரசு!

ரமலான் நோன்பிற்கு முன்பாக 1 மில்லியன் பலான வெப்சைட்டுகளை இந்தோனேசியா அரசு முடக்கியுள்ளது.

இஸ்லாமிய நண்பர்களின் முக்கிய பண்டிகை ரமலான் ஆகும். இந்த பண்டிகையைக் கொண்டாட அவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நோன்பு இருந்து, தவம் இருந்து மற்றும் இல்லாதவர்களுக்கு நற்காரியங்கள் செய்து இந்த முக்கிய பண்டிகையைக் கொண்டாடுவர்.

எனவே இந்த ரமலான் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்தோனேசியா ரமாலான் நோன்பிற்கு முன்பாகவே 1 மில்லியன் பலான இணையதள முகவரிகளை முடக்கி வைக்க இருக்கிறது. இதற்காக இந்தோனேசியாவின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ரமலான மாதத்தின் புனிதம் எந்தவிதத்திலும் கெட்டுவிடக் கூடது என்பதற்காக இந்த காரியத்தைச் செய்திருக்கிறது.

இந்தோனேசியாவின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் டிபாடல் செம்பிரிங் கூறும் போது இந்த ஆபாச வெப்சைட்டுகள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வருகின்றன. இவற்றை ரமலான் மாதம் முழுதும் இந்தோனேசியாவில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

ஜூலை 19 முதல் ரமலான் நோன்பு இந்தோனேசியாவில் தொடங்க இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot