இந்தியாவில் மீண்டு(ம்) வந்த VLC மீடியா ப்ளேயர்! தடையை உடைத்த சுவாரஸ்யம்!

|

VCL மீடியா ப்ளேயர் தற்போது இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கறது. விஎல்சி மீடியா பிளேயர் இணையதளத்தின் மீதான தடையை இந்திய அரசு நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மட்டும் VCL மீடியா ப்ளேயர் சுமார் 73 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது.

VCL மீடியா ப்ளேயர்

VCL மீடியா ப்ளேயர்

VCL மீடியா ப்ளேயர் தற்போது இந்தியாவில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட மல்ட���மீடியா ப்ளேயர் தற்போது மீண்டும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் மீண்டும் அதை பதிவிறக்கம் செய்யலாம். இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விஎல்சி மீடியா ப்ளேயர் மீதான தடையை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முதலில் இந்தியாவின் இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (IFF) முன்னிலைப்படுத்தியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

VideoLan இணையதளம்

VideoLan இணையதளம்

VLC மீடியா பிளேயரைப் பதிவிறக்க மக்கள் இப்போது VideoLan இன் இணையதளத்தை பயன்படுத்தலாம். இந்த மீடியா பிளேயரை இதுவரை சுமார் 73 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து வருவதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்படுகிறது. இந்த தடையை அரசாங்கம் தற்போது நீக்கி இருப்பது தவறுதலாக நடந்திருக்கக் கூட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சட்டப்பூர்வ நோட்டீஸ்

சட்டப்பூர்வ நோட்டீஸ்

VLC மீடியா பிளேயர் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து விஎல்சி தயாரிப்பாளர் கடந்த அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியது. அதில் விஎல்சி சேவை இந்தியாவில் ஏன் தடைசெய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை கூறும்படி கேட்கப்பட்டிருந்தது. மெய்நிகர் விசாரணையின் மூலம் தனது வழக்கை வாதிட ஒரு வாய்ப்பை வழங்கும்படியும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

உரிமையும் கட்டாயமும்

உரிமையும் கட்டாயமும்

அதேபோல் தடைக்கு முறையான காரணத்தை தெரிவிக்க தவறினால், "இந்திய அரசியலைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள எங்கள் உரிமையை பாதுகாக்கத் தவறியதற்காக, உங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு VideoLanக்கு உரிமையும் கட்டாயமும் இருக்கும்" என்று நிறுவனம் இந்���ிய அரசாங்கத்திடம் தெரிவித்தது.

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி

இந்த நிலையில் விஎல்சி மீடியா ப்ளேயர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் நிறுவனம் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதிலும், அதன் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றதாக கூறுகிறது.

ஸ்ட்ரீமிங் மீடியா சர்வர்

ஸ்ட்ரீமிங் மீடியா சர்வர்

VideoLAN திட்டத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான சாஃப்ட்வேர் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா சர்வர் தான் VLC மீடியா பிளேயர். இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ பிளேயர்களில் விஎல்சி மீடியா பிளேயர் பிரதான ஒன்று. VideoLAN திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட VLC மீடியா பிளேயர், இனி இந்தியாவில் வேலை செய்யாது எனவும் 2 மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் தகவல்கள் வெளியானது.

தடை செ���்ய காரணம் என்ன?

தடை செ���்ய காரணம் என்ன?

இந்தியாவில் ஏன் இந்த தளம் தடை செய்யப்பட்டது தற்போது ஏன் கிடைக்கத் தொடங்கியது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அதேபோல் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தடை குறித்து வெளியாகவில்லை. இருப்பினும் தடை செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் என சில தகவல்கள் வெளியானது.

ஏன் தடை செய்யப்பட்டது? எப்படி மீண்டு வந்தது?

ஏன் தடை செய்யப்பட்டது? எப்படி மீண்டு வந்தது?

சீனா ஆதரவு ஹேக்கிங் குழுவான சிகாடா சைபர் தாக்குதல்களுக்கு இந்த தளத்தை பயன்படுத்தியதாக கூறப்பட்டது, இதுவே இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடைசெய்ததற்கு காரணமாக தகவல்கள் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு சீனா ஆதரவு ஹேக்கிங் குழுவான Cicada சைபர் தாக்குதலுக்கு ஒரு பகுதியாக விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. சிகாடா தீங்கிழைக்கும் ஒரு தீம்பொருளை விஎல்சி மீடியா பிளேயரில் பயன்படுத்தி சைபர் தாக்குதலை நடத்தியதாகவும் அதை பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது வெளியான தகவல் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏன் தடை செய்யப்பட்டது தற்போது எப்படி மீண்டு வந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
VLC Media Player Now Available for Download in India! Why ban and Unbanned?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X