உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்

|

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி ஆடிடோம் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் இந்திய சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் இந்தியாவின் வளர்ச்சி, நாடு வளர்ச்சி அடைய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்திய சமூகத்தினரிடம் பேசிய பிரதமர் மோடி

ஜெர்மனியில் இந்திய சமூகத்தினரிடம் பேசிய பிரதமர் மோடி, தரவு நுகர்வில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருவதாகக் கூறினார். மலிவு விலையில் டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என கூறினார். இந்தியா ஒரு காலத்தில் அடிப்படை ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறி இருக்கிறது என குறிப்பிட்டார்.

உலகின் மூன்றாவது ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பு

மேலும் பேசிய பிரதமர் மோடி, 2015 இல் தான் ஜெர்மனிக்கு வந்த போது ஸ்டார்ட் அப் உலகில் இந்தியாவை யாருக்கும் தெரியாது ஆனால் இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்கிறது. யோகாவின் பலம் என்ன என்பதை இந்தியாவை விட உலகமே புரிந்துக் கொண்டிருக்கிறது என கூறினார்.

உலகளிவில் 1 ஜிபி டேட்டா விலை

உலகளிவில் 1 ஜிபி டேட்டா விலை

இப்போது ஒரு கேள்வி வரும், உலகளிவில் 1 ஜிபி டேட்டா விலை என்னவாக இருக்கிறது என்று. இந்திய விலை மதிப்புப்படி ரூ.2039.89 என 1 ஜிபி டேட்டா மலாவி எனும் நாட்டில் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பெனின் நாட்டில் 1 ஜிபி டேட்டா இந்திய விலை மதிப்புப்படி ரூ.1796.23 எனவும் சட் நாட்டில் 1 ஜிபி டேட்டா விலை ரூ.1736.22 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக முந்தைய தகவல் தெரிவித்தது. குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் நாடுகள் எது தெரியுமா?. இதோ விரிவாக பார்க்கலாம்.

மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை

மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் 1 ஜிபி டேட்டா சராசரியாக ரூ.6.70 என வழங்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலில் 1 ஜிபி டேட்டா விலை ரூ.8.19 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்திருப்பதாக டிராய் சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பிரதான டெலிகாம் நிறுவனங்கள்

பிரதான டெலிகாம் நிறுவனங்கள்

இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் பெருமளவு வளர்ந்து இருக்கிறது. பிரதான டெலிகாம் ஆக இருப்பது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகும். ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஜியோ இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனம் இருக்கிறது. ஜியோ குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க காரணம், அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். ஜியோவை விட குறைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஏர்ஜெல், விஐ நிறுவனங்களால் ஜியோ விலை அளவிற்கு ரீசார்ஜ் திட்டங்களை வழங்க முடிவதில்லை.

அதிக வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நிறுவனம்

அதிக வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்து சந்தையில் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்திருக்கிறது. டிராய் அறிவித்த இந்த தகவலின் அடிப்படையில் ஜியோ மற்றும் ஏர்டெல் அதிக வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது.

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

வாடிக்கையாளர்களை இழந்த விஐ

ஒருபுறம் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. டிராய் அறிக்கையின்படி ஏப்ரல் 2022-ல் மட்டும் சுமார் 15.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை விஐ இழந்துள்ளது.

விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.5 கோடியாக அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன்படி சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் 8.1 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்திருக்கிறது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சந்தாதாரர்கள் 36.11 கோடியாக அதிகரித்திருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் பல மடங்கு பின்தங்கி இருக்கிறது. அதாவது விஐ எனப்படும் வோடபோன் ஐடியா சுமார் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன்மூலம் விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.9 கோடியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Cheapest Data Providers and Making Records in Data Consumpion: PM Narendra Modi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X