உங்க Internet ஒழுங்கா வேலை செய்கிறதா? இல்லையா? உடனே இப்படி ஸ்பீட் டெஸ்ட் செய்யுங்க.!

|

இன்றைய சூழ்நிலையில் இன்டர்நெட் (Internet) பயன்படுத்தாத ஒருவரைப் பார்ப்பதென்பது மிகவும் அரிதானது. பயனாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க டெலிகாம் நிறுவனங்களும் 3G, 4G மற்றும் சமீபத்தில் 5G என்று அவற்றின் அலைவரிசை வேகத்தை ஏற்றிக்கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் வேகமான அலைவரிசையைப் பயன்படுத்திப் பழகிவிட்ட பயனர்களுக்குச் சிறிது நேரம் வேகம் குறைந்தால் கூட பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

உங்கள் டிவைஸில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதா?

உங்கள் டிவைஸில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதா?

இத்தகைய சூழ்நிலையில் இன்டர்நெட்டின் பதிவேற்றம் (upload) மற்றும் பதிவிறக்கம் (download) ஸ்பீட் என்னவாக இருக்கிறது என்பதை நாம் கண்காணிக்கத் தெரிந்துகொண்டால், இணைய வேகம் குறையும் போது அவற்றை நம்மால் கண்டறிந்துவிட முடியும். உங்கள் டிவைஸ் ஏதுவாக இருந்தாலும் சரி, அதில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது என்றால், கட்டாயம் நீங்கள் இந்த ட்ரிக்கை தெரிந்து வைத்துக்கொள்வது உங்களுக்குப் பயனளிக்கும்.

இன்டர்நெட் வேகத்தை எப்படிக் கண்காணிப்பது?

இன்டர்நெட் வேகத்தை எப்படிக் கண்காணிப்பது?

உங்கள் சாதனத்தின் இன்டர்நெட் வேகத்தை எப்படிக் கண்காணிப்பது என்று தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். இன்டர்நெட் ஸ்பீட் என்பது ரூட்டரில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பிற்கு எவ்வளவு வேகமாக டேட்டா பரிமாற்றம் செய்யப்படுகிறது மற்றும் எந்த வேகத்தில் டேட்டா பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவதாகும். இது நாம் பயன்படுத்தும் டிவைஸ், இன்டர்நெட் கனெக்ஷன் (internet connection) மற்றும் சிக்னலின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து இருக்கும்.

SIM கார்டு மற்றும் OTT-ல் போலி அடையாளமா? அப்போ, 1 வருட சிறை தண்டனை.! ரூ.50,000 அபராதம்.!SIM கார்டு மற்றும் OTT-ல் போலி அடையாளமா? அப்போ, 1 வருட சிறை தண்டனை.! ரூ.50,000 அபராதம்.!

ஆண்ட்ராய்டு போனில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படி தெரிந்துகொள்வது?

ஆண்ட்ராய்டு போனில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படி தெரிந்துகொள்வது?

டிஸ்பிளே மேலே உள்ள ஸ்டேடஸ் பாரை (status bar) கண்காணிக்க வேண்டும். ஸ்டாக் ஆண்ட்ரொய்ட்டை பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை தவிர மற்ற அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதற்காக எந்த புதிய தர்ட் பார்ட்டி ஆப்பையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்கில் சென்றே இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம்.

போனில் இருக்கும் இந்த செட்டிங்கை On செய்யுங்கள்.!

போனில் இருக்கும் இந்த செட்டிங்கை On செய்யுங்கள்.!

முதலில் உங்கள் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். அதில் notification and status bar என்பதைத் தேர்வு செய்து அதில் Real-time network speed என்பதை ஆன் செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் உங்கள் டிஸ்பிளே ஸ்டேட்டஸ் பாரிலேயே இன்டர்நெட் ஸ்பீட் காண்பிக்கப்படும்.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

Ookla ஸ்பீட் டெஸ்ட் ஆப் மூலம் இன்டர்நெட் ஸ்பீடை அறிந்துகொள்வது எப்படி?

Ookla ஸ்பீட் டெஸ்ட் ஆப் மூலம் இன்டர்நெட் ஸ்பீடை அறிந்துகொள்வது எப்படி?

கூகிள் பிளே ஸ்டோரில் சென்று முதலில் ஸ்பீட் டெஸ்ட் ஆப்ஸை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டு, பின்பு அந்த ஆப்பை ஓபன் செய்துகொள்ளவும். பின்பு அதிலிருக்கும் பெரிய கோ (GO) என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க ஸ்பீடை திரையில் காணலாம்.

ஐபோன், ஐபேட் மற்றும் மேக் புக் ஆகியவற்றில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படி தெரிந்துகொள்வது?

ஐபோன், ஐபேட் மற்றும் மேக் புக் ஆகியவற்றில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படி தெரிந்துகொள்வது?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட்டில் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்து கொள்ள அவற்றில் எந்த அம்சமும் கொடுக்கப்படவில்லை. ஐபோன் பயனாளர்கள் தர்ட் பார்ட்டி ஆப்களை நாட வேண்டியுள்ளது. உங்கள் ஐபோனின் ஆப் ஸ்டோரில் சென்று ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ஆப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Begin Test என்பதைத் தேர்வு செய்தால் உங்கள் இன்டர்நெட்டின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தின் ஸ்பீடை அறிந்து கொள்ளலாம்.

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் ஸ்வீடனில் இருக்கும் காரை மோடி 5G ரிமோட் மூலம் இயக்கினார்.!ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் ஸ்வீடனில் இருக்கும் காரை மோடி 5G ரிமோட் மூலம் இயக்கினார்.!

மேக் புக்கில் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்.!

மேக் புக்கில் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ள இதை செய்யுங்கள்.!

அதேபோல் உங்கள் மேக் புக்கில் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ள அதிலிருக்கும் Network Utility tool என்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு Applications > Utilities > Network Utility என்பதை தேர்வு செய்து அது info என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Ethernet கீழ் Transmit Rate என்பதைத் தேர்வு செய்தால் உங்கள் மேக் புக்கில் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ளலாம். அல்லது www.speedtest.net என்ற இணையதள முகவரிக்குச் சென்றும் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ளலாம்.

விண்டோஸ் லெப்டாப்பில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படித் தெரிந்துகொள்வது?

விண்டோஸ் லெப்டாப்பில் இன்டர்நெட் ஸ்பீடை எப்படித் தெரிந்துகொள்வது?

விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் பயன்படுத்தி இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ள Ctrl+Shift+Esc ஆகிய பட்டன்களை கிளிக் செய்து அதில் Performance என்பதை தேர்வு செய்யலாம். அதில் CPUவின் செயல்பாட்டைக் காட்டும் வரைபடத்தின் கீழ் உங்கள் இன்டர்நெட்டின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தின் ஸ்பீட் காட்டப்பட்டிருக்கும். அல்லது www.speedtest.net என்ற இணையதள முகவரிக்குச் சென்று Begin Test என்பதை தேர்வு செய்தும் இன்டர்நெட் ஸ்பீடை தெரிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Check Internet Speed On Android iPhone Tablet and Other Device Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X