Just In
- 6 hrs ago
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- 6 hrs ago
ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்.!
- 9 hrs ago
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- 9 hrs ago
46 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்: விலையை சொன்னா நம்புவீங்களா?
Don't Miss
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Movies
விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
2022 வேற மாதிரி இருக்கும்- 5ஜி அறிமுகம் உறுதி: இந்தியாவில் இந்த நகரங்களில் தான் ஆரம்பமாம்!
5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் பெற இருக்கும் நகரங்கள் குறித்து பார்க்கையில், அது குருகிராம், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத் உள்ளிட்டவை ஆகும். அதேபோல் இதில் சென்னை, ஐதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் பகுதியும் அடங்கும்.

பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (விஐ)
முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனகர்களான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) ஆகியவை இந்த நகரங்களில் 5ஜி சோதனை தளங்களை நிறுவியுள்ளன. இந்த பெருநகரங்கள் அடுத்த ஆண்டு நாட்டில் 5ஜி சேவைகளை தொடங்குவதற்கான முதல் இடமாக இருக்கும் என தொலைத் தொடர்புத் துறை (DoT) தெரிவித்துள்ளது. 5ஜி என்பது நீண்ட கால பரிணாம வளர்ச்சி மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க்கின் சமீபத்திய மேம்படுத்தல் ஆகும். 4ஜி அறிமுகம் மக்களை பல கட்டம் முன்னோக்கி எடுத்துச் சென்றாலும் 5ஜி அறிமுகம் என்பது மக்களை பல மேம்படுத்தல்களுடன் இணைக்க அனுமதிக்க இருக்கிறது.

மொபைல் உற்பத்தியில் பிரத்யேக தளமாக இந்தியா
முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களை தவிர, 5ஜி சேவைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டெலிகாம் துறைகளும் 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் சோதனை செய்வதற்கும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வில் மொபைல் உற்பத்தியில் பிரத்யேக தளமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அதே நிகழ்வில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி புரட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக இருக்கும் என மோடி முன்னிலையில் அவர் உறுதியளித்தார்.

5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை
மறுபுறம் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் என எரிக்சன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது மொபைல் சந்தாதாரர்களில் எண்ணிக்கையில் 27 சதவீதம் ஆகும். அதேபோல் 5ஜி சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் 1700 கோடி டாலர்களாக அதிகரிக்கும் எனவும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம்
இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது. காற்றின் வேகத்தில் நாம் பயணிக்க ஆசைப்பட்டால் காற்றோடு பயணிக்கும் பறவைகள் எங்கு போகும் என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. 2ஜி சேவையில் எம்எம்எஸ், 3 ஜி சேவையில் வீடியோ கான்பரன்ஸ் என தொடங்கி தற்போதைய 4 ஜி சேவையில் பெரும்பாலான சேவைகளை வீடியோ மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் அடுத்த தலைமுறையாக 5 ஜி சேவை அறிமுகமாக போகிறது என்று சாதாரணமாக கடந்து விடமுடியாது.

பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும்
அடுத்த தலைமுறைக்கான 5 ஜி சேவையில் இந்தியாவின் தொழில்நுட்பங்கள் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறப் போகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4 ஜி சேவையை விட பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும். 5 ஜி சேவையானது 28 ஜிகா ஹெட்ஜில் இருந்து 39 ஜிகாஹெட்ஜ் அலைவரிசையில் இயங்க இருக்கிறது. அதாவது இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps வேகத்திற்கும், பதிவிறக்கம்(Download) 8mbps இல் இருந்து 100 mbps வேகத்திலும் இருக்கும்.

கமாண்டிங் ஆப்பரேஷன் மூலம் இயக்கலாம்
ஆரம்பக்காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கும் ரிமோட்டுக்கும் மட்டுமே சென்சார் பயன்படுத்தப்பட்டது. தற்போது வீட்டில் உள்ள டியூப் லைட், பேன் என பல்வேறு பொருட்களுக்கும் சென்சார் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.5ஜி அறிமுகத்தின் மூலம் வீடுகளில் உள்ள டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசிகள், வாசிங்மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கமாண்டிங் ஆப்பரேஷன் (தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் கருவி) மூலம் இயக்க உள்ளோம்.அதேபோல் இந்தியாவில் உபர் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி வாகனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அதற்கு இணைய வேகம் என்பது முக்கியமான ஒன்று. தற்போதைய 4 ஜி சேவையில் தானியங்கி வாகனங்கள் இயக்குவதில் சவால்கள் இருந்தாலும், 5 ஜி சேவை மூலம் தானியங்கி வாகனங்கள் சர்வசாதாரனமாக இயக்கலாம்.

விரல் நுணியில் ஒவ்வொரு செயல்பாடுகளும்
லேப்ரோஸ்கோபி, ஆன்ஜியோ போன்ற மருத்துவசிகிச்சைகளும் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறி மருத்துவத்திலும் அடுத்தக்கட்டத்தை சந்திக்க உள்ளோம். விரல் நுணியில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அதிவேகமாக பயன்படுத்தப்படும் 5 ஜி சேவை ஒவ்வொரு செல்போன்களிலும் இணைப்பதற்கு, பல்வேறு செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும். விர்ட்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்களும் அடுத்தக்கட்டத்துக்கு சென்று செல்போன் கேம்களும் அதிநவீன முறையில் பயன்படுத்துவோம். பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களும் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்கும்.

5ஜி போன்ற இணைய வேகம் அவசியம்
இந்தியா போன்று வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் 5ஜி போன்ற இணைய வேகம் அவசியம் என்றாலும். உலகம் என்பது அனைவருக்கும் சமமானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்து வெளியான படத்தில் 2.o என்ற படத்தின் கதைக்கருவானது செல்போன் பயன்பாடுகளால் வெளியாகும் கதிர் வீச்சுகள் மூலம் பறவைகள் அழிந்து வருவதை சுட்டிக்காட்டியிருக்கும். நெதர்லான்ட்டில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஏராளமான பறவை இணங்கள் வேகமாக அழிந்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தது.

புதிய தொழில்நுட்ப ஆதரவு
5 ஜி இணைய வேகத்தில், 4 ஜி இணைய வேக கதிர்வீச்சுகளை விட குறைவாக இருக்கும் என தொழில் நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகளவில் விரிந்த கம்பியில்லா வலை(WWWW) என்ற புதிய சொல் பயன்படுத்தப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு புதிய ரேடியோ என பெயரிடப்பட்டிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086