1 நொடிக்கு 150 HD திரைப்படம் டவுன்லோட் செய்யலாமா? சீனா அறிவித்த உலகின் புது இன்டர்நெட் வேகம் எவ்வளவு?
உலகின் அதிவேக இன்டர்நெட் (Internet) சேவையை சீனா இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு வினாடிக்கு 1.2 டெராபிட் (Terabits) டேட்டாவை அனுப்பும் திறன் கொண்டது. அதாவது இந்த வேகத்தில் நீங்கள் 1 வினாடிக்குள் 150 முறை HD திரைப்படங்களை டவுன்லோட் செய்யலாம்.
முன்னொரு நாளில் ஒரு திரைப்படத்தை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், அதற்கு பல மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், இன்றைய நிலையில் அப்படி நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இனி 1 நொடியில் 150 திரைப்படங்களை டவுன்லோட் செய்யும் திறன் கொண்ட இன்டர்நெட் வேகத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.

சீனா, அறிக்கைகளின்படி, உலகின் அதிவேக இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமீபத்தில் வெளியான டைகர் 3 போன்ற படத்தை ஒரு நொடியில் 150 முறை டவுன்லோட் செய்யக்கூடிய அற்புதமான வேகத்தைக் கொண்டுள்ளது என்று சீனா அறிவித்துள்ளது. 150 திரைப்படத்தை வெறும் 1 நொடியில் பதிவிறக்கம் செய்யலாமா? இது உண்மையா? இதன் வேகம் எவ்வளவு என்பது போன்ற தகவலை விரிவாக பார்க்கலாம்.
உலகின் அதிவேக இன்டர்நெட் சேவை (Worlds most fastest internet speed):
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, சீனா உலகின் அதிவேக இன்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளது. இது ஒரு நொடிக்கு 1.2 டெராபிட் டேட்டாவை அனுப்பும் திறன் கொண்டது. இந்த இன்டர்நெட் வேகமானது தற்போதைய சராசரி இணைய வேகத்தை விட பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பயன்பாட்டில் உள்ள இன்டர்நெட் வேகம் பொதுவாக வினாடிக்கு 100 ஜிகாபிட் ஆக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவின் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட்2 நெட்வொர்க் கூட அதிகபட்சமாக வினாடிக்கு 400 ஜிகாபிட் வேகத்தை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகத் தொடங்கப்பட்ட இணையத்தின் உள்கட்டமைப்பு 3,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பரவியுள்ளது. இது பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவை ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களின் பரந்த நெட்வொர்க் மூலம் இணைக்கிறது.
சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து இந்த புதிய இன்டர்நெட் வேகத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த இன்டர்நெட் வேகத்தை செயல்படுத்தி, இந்த நெட்வொர்க் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இறுதியாக, சீனா நினைத்த வேகத்தை இப்போது உண்மையாக்கியுள்ளது.
150 திரைப்படங்களை 1 நொடியில் டவுன்லோட் செய்யலாமா?
Huawei டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் வாங் லீ கூறுகையில், இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நெட்வொர்க் எவ்வளவு வேகமானது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார். இன்டர்நெட் மிக வேகமாக இருப்பதால், ஒரே நொடியில் 150 ஹை-டெபினிஷன் படங்களுக்கு சமமான தரவை மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
அதாவது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் சமீபத்தில் வெளியான டைகர் 3 போன்ற எச்டி படம் இந்த புதிய இணைப்பின் மூலம் ஒரு நொடிக்கு சுமார் 150 முறை பதிவிறக்கம் செய்ய முடியும். மறுபுறம், சீனப் பொறியியல் அகாடமியைச் சேர்ந்த FITI திட்டத் தலைவர் வூ ஜியான்பிங் கூறுகையில், இந்த புதிய இன்டர்நெட் வேகம் "வெற்றிகரமான செயல்பாடு" மட்டுமல்ல.
இது எதிர்காலத்தின் "இன்னும் வேகமான இணையத்தை" உருவாக்க சீனாவுக்கு கிடைத்த மைக்கல் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், இந்த புதிய இணைய வேகத்தை விட இன்னும் அதிகமான வேகத்தை தொட சீனா தொடர்ந்து மற்றொரு சோதனையில் களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 1.2 டெராபைட்ஸ் வேகத்தை தாண்டி செல்ல சீனா இப்போது முடிவு செய்துள்ளது. இந்த இணைய வேகம் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பாருங்கள்.


Click it and Unblock the Notifications