தமிழக வாடிக்கையாளர்களே., சின்ன பிரச்சனை- உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யவும்: ஏர்டெல் அறிவிப்பு!

|

தமிழகத்தின் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ஏர்டெல் பயனர்களுக்கு இணைய சேவை மற்றும் அலைபேசி சேவைகள் முடங்கி இருந்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பயனர்கள் இதுகுறித்த புகார்களை டுவிட்டரில் #Airtel என்ற ஹேஷ்டேக்களுடன் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஏர்டெல் இந்த சிக்கல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு ஏர்டெல் பதிலளித்துள்ளது. அந்த பதிவில் "எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது, அது இப்போது சரி செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் அவதி அப்படி எதுவும் இல்லையே எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்ன பிரச்சனை., உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும்- ஏர்டெல்

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பயன்பாடுகளில் சில சிக்கல் இருப்பதாக டுவிட்டரில் ஹேஷ்டேக் ஏர்டெல் என்பதுடன் தங்கள் குறைகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து டுவிட்டரில் #Airtel என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. டுவிட்டரில் கருத்து தெரிவித்த பயனர்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம். குகன் எஸ் என்ற பயனர் ஏர்டெல் சிக்னல் சென்னை முழுவதும் இருக்கிறது என குறிப்பிட்டு உங்கள் தொலைபேசியை போட்டு உடைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், 4ஜி சிக்னல் இல்லை? என குறிப்பிட்டு சென்னையில் மட்டுமா அல்லது நாட்டின் வேறு எதுவும் பகுதிகளில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒரு பயனர் தனது ஏர்டெல் நெட்வொர்க் பயன்பாட்டின் ஸ்பீடு அளவை குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இணைய வேகம் மிகக் குறைந்து இருக்கிறது. மேலும் வேறு பயனர் எனக்கு மட்டும் ஏர்டெல் நெட்வொர்க் எடுக்கவில்லையா அல்லது வேறு யாருக்கும் இந்த சிக்கல் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு பயனர் தற்போது வரை இந்த சிக்கல் சரிசெய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சின்ன பிரச்சனை., உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும்- ஏர்டெல்

தொடர்ந்து பயனர்கள் புகார் அளிக்கத் தொடங்கியதை அடுத்து ஏர்டெல் கேர்ஸ் டுவிட்டர் கணக்கில் இதற்கு பதிலளிக்கப்பட்டது. அதில் அன்புள்ள தமிழக வாடிக்கையாளர்களே எங்கள் நெட்வொர்க்கில் சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது அது தற்போது சரி செய்யப்பட்டது. உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும் நன்றி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Network Issue: Its a minor technical problem., Restart your mobile- Airtel Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X