விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!

|

விபிஎன் (Virtual Private Network) குறித்து அனைவரும் அறிந்ததே. விபிஎன்-ஐ பயன்படுத்தினால் பல நன்மைகள் இருக்கிறது. விபிஎன் ஆனது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் ஐபி முகவரியை மாற்றி, உங்கள் இருப்பிடத்தை வேறு இடத்தில் காட்டுகிறது. இந்த விபிஎன் சேவையானது பல கட்டுப்பாடுகளை தவிர்க்க உதவுகிறது. விபிஎன் ஆனது தங்களது உலாவல் வரலாற்றை வழிநடத்துகிறது. அதோடு மட்டுமின்றி உங்கள் சேவையகங்கள் மூலம் ரூட் செய்து தரவை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து வெளியேறுவதே ஒரே வழி

இந்தியாவில் இருந்து வெளியேறுவதே ஒரே வழி

புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தயாராக இல்லாத விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (விபிஎன்) இந்தியாவில் இருந்து வெளியேறுவதே ஒரே வழி என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இணைய மீறல் சம்பவங்கள் குறித்து சமீபத்திய உத்தரவு குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு இணை அமைச்சர் பதிலளித்து பேசினார். அதில், பாதுகாப்பான நம்பகத்தன்மை வாய்ந்த இணையமே எப்போதும் நல்லவைகளுக்கு உதவ முடியும் என அனைத்து நல்ல நிறுவனங்களும் புரிந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்கள்

இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்கள்

மேலும் இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்களை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என யாரும் சொல்ல வாய்ப்பில்லை, உங்களிடம் பதிவுகள் இல்லையென்றால், பதிவுகளை பராமரிக்கத் தொடங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் விபிஎன் வழங்குனராக இருக்கும் பட்சத்தில் உங்கள் சேவையை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறைக்கவும், விதிகளை பின்பற்றவில்லை என்பதும் சரியல்லைஇது செய்யவில்லை என்றால் வெளிப்படையாக சொல்கிறேன் வெளியேறுவதைவிட வேறு வழிஇல்லை என குறிப்பிட்டார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது கிளவுட் சேவை வழங்குனர்கள், விபிஎன் நிறுவனங்கள், தரவு மைய நிறுவனங்கள் மற்றும் மெய்நிகர் தனியார் சேவையக வழங்குனர்கள் பயனர்களின் தரவை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கிறது.

சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்

சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்

புதிய விதியால் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என விபிஎன் சேவை வழங்குனர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சைபர் விதிமீறல்கள் நடைபெறும் பட்சத்தில் அதை ஆறு மணிநேரத்துக்கு உள்ளாக தெரிவிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இந்த விதி மாற்றி அமைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். குற்றப் பின்னணியில் சில ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள், இந்த பலவீன தனத்தை பல நாடுகள் பயன்படுத்துகின்றன. குற்றம் மற்றும் சைபர் நிகழ்வுகள் குறித்து அதன் தன்மை, வகை, வடிவம் உள்ளிட்டவைகளை கண்டறிந்து இதுகுறித்து விசாரணை, ஆய்வு, சம்பவத் தன்மை குறித்து புரிந்து கொள்ளவே விரைவாக தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரிக்கை

உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரிக்கை

புதிய விதி இணைய பாதுகாப்புகளில் குந்தகம் விளைவிக்கும் என சில விபிஎன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கூகுள், பேஸ்புக், ஐபிஎம் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை அமைப்பான ஐடிஐ, இந்திய அரசின் உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரி இருக்கிறது. மேலும் புதிய ஆணையின் கீழ் உள்ள விதிகள் நிறுவனங்களை மோசமாக பாதிக்கலாம் மற்றும் நாட்டில் இணைய பாதுகாப்பை குறைந்து மதிப்பிட உட்படுத்தலாம் என ஐடிஐ தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த உத்தரவை இறுதி செய்வதற்கு முன்பாக தொழில்துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளும்படி தொழில் அமைப்பு கேட்டிருக்கிறது.

சமூக ஊடகத் தளங்கள் மற்றும் தரவு மையங்கள்

சமூக ஊடகத் தளங்கள் மற்றும் தரவு மையங்கள்

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆனது ஏப்ரல் 28 அன்று, இணையச் சேவை வழங்குநர்கள், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் தரவு மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இணையப் பாதுகாப்பு மீறல் சம்பவங்களைக் கவனித்த 6 மணி நேரத்திற்குள் தெரிவிப்பது கட்டாயம் என உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் விதிமீறல் சம்பவங்களை கவனித்து ஆறு மணி நேரத்துக்குள் கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Comply with Rules or Leave India: Government tells to VPN Service Providers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X