பெரிய பாதிப்பு இருக்குமாம்- அமெரிக்காவில் வரும் 5ஜி சேவை: விமான சேவையை நிறுத்தும் நிறுவனங்கள்-இவ்வளவு இருக்கா?

|

அமெரிக்காவில் கொண்டு வரும் 5ஜி சேவைகளால் விமானங்களில் பயன்படுத்தப்படும் அல்டிமீட்டர் மற்றும் அதி உயர் நுண்ணணர்வு கருவிகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. 5ஜி சேவையின் அலைக்கற்றால் விமானம் தரையிறங்கும் முறைக்கு மாற்றப்படும் போது அதில் சிக்கல் வரும் என விமான நிறுவனங்கள் எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவில் 5ஜி இணைய சேவை பெரும்பாலான பகுதிகளில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதன் அலைக்கற்றைகளால் விமான சேவை பாதிக்கும் என விமான நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.

விமானத்தின் முக்கிய நுண்ணணர்வு கருவிகள்

விமானத்தின் முக்கிய நுண்ணணர்வு கருவிகள்

விமானத்தின் முக்கிய நுண்ணணர்வு கருவிகள் 5ஜி அலைக்கற்றால் பாதிக்கப்படும் எனவும் இதனால் விமானம் தாமதமாகும், விமான போக்குவரத்து ரத்து செய்யப்படவும் தள்ளிவைக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்ட விமான நிறுவனங்கள் பயணிகள் போக்குவரத்து. சரக்கு ஏற்றுமதி இறக்குமதி, நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதன் காரணத்தால் விமானத் தளங்களுக்கு அருகில் இருக்கும் 5ஜி டவர்களை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

விமானங்களை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு

விமானங்களை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு

துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், சிகாகோ, நெவார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் அமெரிக்க நகரங்களுக்கான விமானங்களை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதேபோல் ஜப்பான் ஏர்லைன்ஸ் கோ மற்றும் ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ் இன்க் சில வழித்தடங்களை கைவிடுவதாகவும் தங்கள் 777 ஜெட் விமானங்களை பறக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தன. ஏர்இந்தியா தெரிவித்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வருவதன் காரணாக அமெரிக்காவில் இயக்கப்படும் தங்களது சேவை குறைக்கப்படலாம் அல்லது மாற்றி அமைக்கப்படலாம் என குறிப்பிட்டது. இந்த விவரங்களை ஏர் இந்தியா டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறது.

விமானங்களுக்கான அட்டவணைகள் திருத்தம்

விமானங்களுக்கான அட்டவணைகள் திருத்தம்

அமெரிக்க விமான நிலையங்களுக்கு அருகில் ஏடி&டி இன்க். மற்றும் வெரிசோன் கம்யூனிகேஷன் இன்க். ஆகியவற்றின் 5ஜி வெளியீடு விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ஏர்லைன்ஸ் அமெரிக்காவின் விமானங்களுக்கான அட்டவணைகள் மற்றும் விமானங்களை சரிசெய்து வருகின்றன.

5ஜி சேவைகளை இயக்கும் ஏடி&டி மற்றும் வெரிஷோன்

5ஜி சேவைகளை இயக்கும் ஏடி&டி மற்றும் வெரிஷோன்

இந்த விவகாரம் குறித்து 5ஜி சேவைகளை இயக்கும் ஏடி&டி மற்றும் வெரிஷோன் நிறுவனங்கள் முன்னதாக 40-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் 5ஜி சி பேண்ட் எவ்வித பாதிப்புகளையும் விமான சேவைகளில் ஏற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. இருப்பினும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டதையடுத்து விமானத் தளங்களுக்கு அருகில் இருக்கும் 5ஜி டவர்கள் இயக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. பிற அனைத்து டவர்களும் இயக்கப்பட உள்ளன.

இந்தியாவில் 5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை

இந்தியாவில் 5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் என எரிக்சன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது மொபைல் சந்தாதாரர்களில் எண்ணிக்கையில் 27 சதவீதம் ஆகும். அதேபோல் 5ஜி சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் 1700 கோடி டாலர்களாக அதிகரிக்கும் எனவும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள்

2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள்

இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது. காற்றின் வேகத்தில் நாம் பயணிக்க ஆசைப்பட்டால் காற்றோடு பயணிக்கும் பறவைகள் எங்கு போகும் என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. 2ஜி சேவையில் எம்எம்எஸ், 3 ஜி சேவையில் வீடியோ கான்பரன்ஸ் என தொடங்கி தற்போதைய 4 ஜி சேவையில் பெரும்பாலான சேவைகளை வீடியோ மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் அடுத்த தலைமுறையாக 5 ஜி சேவை அறிமுகமாக போகிறது என்று சாதாரணமாக கடந்து விடமுடியாது.

அடுத்த தலைமுறைக்கான 5 ஜி சேவை

அடுத்த தலைமுறைக்கான 5 ஜி சேவை

அடுத்த தலைமுறைக்கான 5 ஜி சேவையில் இந்தியாவின் தொழில்நுட்பங்கள் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறப் போகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4 ஜி சேவையை விட பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும். 5 ஜி சேவையானது 28 ஜிகா ஹெட்ஜில் இருந்து 39 ஜிகாஹெட்ஜ் அலைவரிசையில் இயங்க இருக்கிறது. அதாவது இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps வேகத்திற்கும், பதிவிறக்கம்(Download) 8mbps இல் இருந்து 100 mbps வேகத்திலும் இருக்கும்.

5ஜி அறிமுகத்தின் மூலம் மேம்படும் பயன்பாடுகள்

5ஜி அறிமுகத்தின் மூலம் மேம்படும் பயன்பாடுகள்

ஆரம்பக்காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கும் ரிமோட்டுக்கும் மட்டுமே சென்சார் பயன்படுத்தப்பட்டது. தற்போது வீட்டில் உள்ள டியூப் லைட், பேன் என பல்வேறு பொருட்களுக்கும் சென்சார் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.5ஜி அறிமுகத்தின் மூலம் வீடுகளில் உள்ள டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசிகள், வாசிங்மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கமாண்டிங் ஆப்பரேஷன் (தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் கருவி) மூலம் இயக்க உள்ளோம். அதேபோல் இந்தியாவில் உபர் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி வாகனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அதற்கு இணைய வேகம் என்பது முக்கியமான ஒன்று. தற்போதைய 4 ஜி சேவையில் தானியங்கி வாகனங்கள் இயக்குவதில் சவால்கள் இருந்தாலும், 5 ஜி சேவை மூலம் தானியங்கி வாகனங்கள் சர்வசாதாரனமாக இயக்கலாம்.

மருத்துவத்துறையில் மேம்பாடு

மருத்துவத்துறையில் மேம்பாடு

லேப்ரோஸ்கோபி, ஆன்ஜியோ போன்ற மருத்துவசிகிச்சைகளும் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறி மருத்துவத்திலும் அடுத்தக்கட்டத்தை சந்திக்க உள்ளோம். விரல் நுணியில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அதிவேகமாக பயன்படுத்தப்படும் 5 ஜி சேவை ஒவ்வொரு செல்போன்களிலும் இணைப்பதற்கு, பல்வேறு செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும். விர்ட்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்களும் அடுத்தக்கட்டத்துக்கு சென்று செல்போன் கேம்களும் அதிநவீன முறையில் பயன்படுத்துவோம். பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களும் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்கும்.

Best Mobiles in India

English summary
Airlines have expressed opposition Over upcoming 5G service in the United States: Do you know the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X