கொரோனா தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்வோம்: நீதா அம்பானி உறுதி!

|

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நீதா அம்பானி கொரோனா தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லப்படும் என்பதை உறுபடுத்த நாங்கள் முன்வருவோம் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என கூறினார்.

முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ்

முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய், சில்லரை வர்த்தகத் துறை என பலவற்றில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த பொதுக் கூட்டமானது முதன்முறையாக விர்ட்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது.

பல்வேறு செயலிகள் அறிமுகம்

பல்வேறு செயலிகள் அறிமுகம்

இந்த நிகழ்ச்சியில் ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளோஸ், ஜியோ டிவி ப்ளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் ஜியோ டிவி ப்ளஸ் மூலம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களுக்கு தனித்தனி லாக் இன் இல்லாமல் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

இனி அசைக்க முடியாது: ஜியோவில் முதலீடு செய்த கூகுள்., கூட்டாக குறைந்த விலை 5ஜி போன் தயாரிப்பு!இனி அசைக்க முடியாது: ஜியோவில் முதலீடு செய்த கூகுள்., கூட்டாக குறைந்த விலை 5ஜி போன் தயாரிப்பு!

கலந்து கொண்டு பேசிய நீதா அம்பானி

கலந்து கொண்டு பேசிய நீதா அம்பானி

இதில் கலந்து கொண்டு பேசிய நீதா அம்பானி, ஜியோவின் டிஜிட்டல் கட்டமைப்பின் உதவியுடன் இந்தியா முழுவதும் விரைவாக மெகா அளவு கோவிட்-19 சோதனைக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையானது அரசு மற்றும் உள்ளூர் நகராட்சிகளுடன் கூட்டு சேர்ந்து வருகிறது என கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு செல்லப்படும்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு செல்லப்படும்

கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அது டிஜிட்டல் விநியோக முறையில் விநியோக சங்கிலியை பயன்படுத்தி நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு செல்லப்படும் என்பதை உறுபடுத்த நாங்கள் முன்வருவோம் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என நீதா அம்பானி கூறினார்.

ஜியோ வழங்கிய திட்டங்கள்

ஜியோ வழங்கிய திட்டங்கள்

அதேபோல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு என வசதியாக ஜியோ வழங்கிய திட்டங்கள் குறித்தும், பல லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது குறித்தும் நீதா அம்பானி விவரித்தார்.

பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனை

பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனை

மேலும் ரிலையன்ஸ் மற்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி மும்பையில் இந்தியாவின் முதல் 100 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனையை இரண்டு வாரங்களுக்குள் அமைத்தது குறித்து விவரித்தார்.

இலவச உணவு விநியோகத் திட்டம்

இலவச உணவு விநியோகத் திட்டம்

உலகின் மிகப் பெரிய இலவச உணவு விநியோகத் திட்டமான மிஷன் அண்ணா சேவாவின் கீழ், நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சமூகங்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் என ஐந்து கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த அமைப்பின் மூலம் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் பராமரிப்பு வழங்குநர்களுக்கு என தினமும் ஒரு லட்சம் N95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை வழங்கியது குறித்து விவரித்தார்.

10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!

அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருள்

அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருள்

COVID-19 நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவையை விரைவாக வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் ரிலையன்ஸ் அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருளை வழங்குகிறது எனவும் நீதா அம்பானி அந்த உரையில் குறிப்பிட்டார்.

source: ndtv.com

Best Mobiles in India

English summary
I can assure corona vaccine reaches every nook and corner of india: Nita ambani

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X