இனி அசைக்க முடியாது: ஜியோவில் முதலீடு செய்த கூகுள்., கூட்டாக குறைந்த விலை 5ஜி போன் தயாரிப்பு!

|

ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதோடு இந்தியாவில் குறைந்த விலை 5 ஜி ஸ்மார்ட்போன்களை கூட்டாக தயாரிக்க உள்ளதாக அம்பானி அதில் குறிப்பிட்டார்.

ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு

ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு

பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ்,ஜெனரல் அட்லாண்டிக், கே.கே ஆர், முபதாலா உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்தன.

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம்

ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய், சில்லரை வர்த்தகத் துறை என பலவற்றில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த பொதுக் கூட்டமானது முதன்முறையாக விர்ட்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது.

பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!

பல்வேறு செயலிகள் அறிமுகம்

பல்வேறு செயலிகள் அறிமுகம்

இந்த நிகழ்ச்சியில் ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளோஸ், ஜியோ டிவி ப்ளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் ஜியோ டிவி ப்ளஸ் மூலம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களுக்கு தனித்தனி லாக் இன் இல்லாமல் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

5 ஜி நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும்

5 ஜி நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும்

இதில் பேசிய அம்பானி, 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியர்கள் காத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் 2ஜி அம்ச தொலைபேசியை பயன்படுத்தும் 350 மில்லியன் இந்தியர்கள் மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு இடம்பெயரும் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ரூ.33,737 கோடி ஜியோவில் முதலீடு

ரூ.33,737 கோடி ஜியோவில் முதலீடு

இதில் பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி ஜியோவில் முதலீடு செய்து, ஜியோவின் 7.7 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுருப்பதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

வெகு விரைவில் 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கும்

வெகு விரைவில் 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கும்

குறுகிய காலத்தில் மிகப்பெரிய முதலீடு பெற்ற ஜியோ, வெகு விரைவில் 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கும் எனவும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி இயங்குதளம் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிப்போம்

வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிப்போம்

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க இருக்கிறது என அம்பானி அறிவித்தார். தற்போதைய நிலையின்படி 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும்படியான வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக அம்பானி தெரிவித்தார்.

ஜியோமார்ட் சேவை

ஜியோமார்ட் சேவை

ஜியோமார்ட் சேவை மில்லியன் கணக்கான இந்திய சிறு வணிகர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வாடிக்கையாளர்கள் தடையின்றி பரிவர்த்தனை செய்வதற்கும் பெரிதளவு உதவியாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

5 ஜி தொழில்நுட்ப சோதனைகள்

5 ஜி தொழில்நுட்ப சோதனைகள்

5 ஜி ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் 5 ஜி தொழில்நுட்ப சோதனைகள் தொடங்கப்படும் எனவும் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஊடகங்கள், நிதி சேவைகள், புதிய வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் இயக்கம் போன்ற பல தொழில் வளர்ச்சிக்கு கட்டாய தீர்வுகளை உருவாக்கலாம் என முகேஷ் அம்பானி உறுதி கூறினார்.

எளிதான தளமாக இருக்கும்

எளிதான தளமாக இருக்கும்

ஜியோமார்ட்டின் தனித்துவமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு இஷா அம்பானி தொகுக்கிறார். நம்பகமான பொருட்கள், புதிய தயாரிப்புகள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகின்றன. சிறந்த மதிப்பு மற்றும் கவர்ச்சிகரமான விலைகள். பல மொழிகளில் குரல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட வசதிகளோடு எளிதான தளமாக இது இருக்கும் என கூறினார்.

ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?

ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங்

ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங்

இந்த வார தொடக்கத்தில் ஆர்ஐஎல்., வரம்பற்ற இலவச அழைப்போடு ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது ஜூம் செயலிக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் கிளவுட் அடிப்படையிலான வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜியோமீட் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் 5 மில்லியன் பதிவிறக்கங்களைக் கண்டதாக அம்பானி கூறினார்.

இலக்கு முன்னதாகவே நிறைவேறியது

இலக்கு முன்னதாகவே நிறைவேறியது

ரிலையன்ஸ் இப்போது பூஜ்ஜிய நிகர கடன் நிறுவனமாகும், இது மார்ச் 2021 ஆம் ஆண்டின் எனது இலக்கு முன்னதாகவே நிறைவேறியது என கூறினார். அதன் பங்குதாரர்களை எளிதில் உள்நுழைவதற்காக உள்நுழைதல், கேள்விகளைக் கேட்பது மற்றும் தீர்மானத்தில் வாக்களிப்பது போன்ற நுணுக்கமான செயலாக்கத்திற்கு வாட்ஸ்அப் எண் + 91-79771-11111 வழியாக ஆர்.ஐ.எல் ஒரு கல்வி சேர்ட் போர்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Google's invest rs.33,737 cr and develop affordable 5G smartphone with jio

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X